ஜப்பான் மீது ஏவுகணை வீசியது வடகொரியா:

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சியோல்: ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு ஆசியா நாடான வட கொரியா அதிபராக கிம் ஜோங் உள்ளார். வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக, தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் இதுவரை 24க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று ஜப்பான் வடக்கு பகுதிகளில்
ஜப்பான்  ,ஏவுகணை  வடகொரியா:

சியோல்: ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு ஆசியா நாடான வட கொரியா அதிபராக கிம் ஜோங் உள்ளார். வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக, தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் இதுவரை 24க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஜப்பான் வடக்கு பகுதிகளில் வடகொரியா திடீரென ஏவுகணை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிர்ஷ்டவசமாக இந்த ஏவுகணை பசிபிக் கடலில் விழுந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.


latest tamil news




ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. மீண்டும் ஏவுகணை தாக்குதலை வடகொரியா நடத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏவுகணை வீசிய பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் பதுங்கி கொள்ளுமாறு ஜப்பான் அரசு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


வடகொரியாவின் திடீர் தாக்குதலையடுத்து வடக்கு ஜப்பானில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த 2017 ஆம் ஆண்டு இதே போன்று ஜப்பான் மீது வட கொரிய வீசிய ஏவுகணைக்கு பின் இது இரண்டாவது முறையாகும்.



இது குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறியது, வட கொரியாவின் இந்த செயல் மிகவும் மோசனது என கண்டித்தார்.

ஜப்பான் ராணுவ அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறியது, வடகொரிய வீசிய ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், மீண்டும் மீண்டும் ஏவுகணை ஏவப்படுவதை எதிர்கொள்ளும் வகையில் எங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
07-அக்-202221:56:01 IST Report Abuse
vijay ""..உலக யுத்தம் வந்து விடும் போல் இருக்கிறது..."" ஆமாம் பாஸ், நீங்க சொல்றது சரிதான். ""...வரும் ஆனா வராது..""...சார் நீங்க சொல்றதும் சரிதான். அங்கிட்டு ஒரு குத்து இங்கிட்டு ஒரு குத்து - வடிவேலு காமெடி வழியே என் வழி
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
05-அக்-202200:34:15 IST Report Abuse
Vena Suna உலக யுத்தம் வந்து விடும் போல் இருக்கிறது.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
05-அக்-202209:32:57 IST Report Abuse
Fastrackவரும் ஆனா வராது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X