கோவில்களில் சிறப்பு வழிபாடு

Added : அக் 05, 2022 | |
Advertisement
அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், கொலு பூஜை நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகி அம்மன் கோவிலில், நவராத்திரி கொலு வைக்கப்பட்டிருந்தது. செல்வநாயகி அம்மன், சரஸ்வதி
கோவில்களில் சிறப்பு வழிபாடு

அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.


நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், கொலு பூஜை நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகி அம்மன் கோவிலில், நவராத்திரி கொலு வைக்கப்பட்டிருந்தது. செல்வநாயகி அம்மன், சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


சொக்கம்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் நஞ்சையன் தலைமையில், மனதுக்கு மகிழ்ச்சி தருவது நகர வாழ்க்கையா அல்லது கிராமத்து வாழ்க்கையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு செல்வ விநாயகருக்கு அபிஷேக பூஜையும், மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தலும், சிறப்பு பஜனை மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X