இயற்கை செம்மையாகட்டும்...பசுமை தழைக்கட்டும்!

Added : அக் 05, 2022 | |
Advertisement
திருப்பூர் : வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நேற்று ஒரேநாளில், 1,464 செம்மரம் உள்பட மொத்தம், 2,048 மரக்கன்றுகள் நடப்பட்டன.இரண்டு லட்சம் மரக்கன்று நடும் இலக்கை நோக்கி, முன்னேறி வருகிறது வனத்துக்குள் திருப்பூர் திட்டம் -- 8. இந்த திட்டத்தில் நேற்று இரண்டு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.அவ்வகையில், மூலனுார் அருகே மேட்டு வலசு, மனோகரன் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான வர
இயற்கை செம்மையாகட்டும்...பசுமை தழைக்கட்டும்!

திருப்பூர் : வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நேற்று ஒரேநாளில், 1,464 செம்மரம் உள்பட மொத்தம், 2,048 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இரண்டு லட்சம் மரக்கன்று நடும் இலக்கை நோக்கி, முன்னேறி வருகிறது வனத்துக்குள் திருப்பூர் திட்டம் -- 8. இந்த திட்டத்தில் நேற்று இரண்டு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.அவ்வகையில், மூலனுார் அருகே மேட்டு வலசு, மனோகரன் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான வர பருத்திக்காடு தோட்டத்தில், 1,189 செம்மரம்; 139 தேக்கு என, மொத்தம் 1,328 மரக்கன்றுகள் நடப்பட்டன.



இதேபோல, வெள்ளகோவில் அருகே முருங்கை காட்டு வலசு, சபாபதி என்பவருக்கு சொந்தமான களத்து காட்டு தோட்டத்தில், 275 செம்மரம்; 72 வேம்பு, 70 தேக்கு; 10 சந்தனம்; 100 மகோகனி; 200 பனை என, 720 மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விரண்டு இடங்களில் நடந்த நிகழ்வில் நேற்று, 2,048 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர்,90470 86666என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X