தி.மு.க., அரசு மீது ஹிந்து மக்கள் கட்சி மத்திய அரசிடம் புகார்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
தமிழகத்தில் பா.ஜ.,வினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யும் தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சரிடம், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தார். வலியுறுத்தல்இதன்பின் அவர் கூறியதாவது:தமிழகத்தில்
திமுக, அரசு ,ஹிந்து மக்கள் கட்சி , மத்திய அரசு,புகார்

தமிழகத்தில் பா.ஜ.,வினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யும் தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சரிடம், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தார்.


வலியுறுத்தல்


இதன்பின் அவர் கூறியதாவது:தமிழகத்தில் சமீபகாலமாக பா.ஜ.,வினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பா.ஜ.,வினரின் வீடுகள், அலுவலகங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. பா.ஜ., நிர்வாகிகள் பலர் பொய் வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தினோம்.


latest tamil news



மேலும், சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாயிலாக தி.மு.க., அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. இது குறித்தும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். ஹிந்து பெண்கள் குறித்து அவதுாறாக பேசிய தி.மு.க., - எம்.பி., ராஜா மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினோம்.



கோரிக்கை


இதேபோல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், இலங்கை திரிகோணமலையில் உள்ள திருக்கோனேஸ்வரர் கோவிலின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும்படி மனு அளித்தோம். மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தனியாக சந்தித்து மனு அளித்தோம். அதில், சத்ரபதி சிவாஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை அமைக்கும்படி கோரியிருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202219:18:35 IST Report Abuse
kulandai kannan அர்ஜூன் சம்பத் என்றாலே, சிலருக்கு அடி வயிறு கலங்குகிறது.
Rate this:
Cancel
05-அக்-202215:42:11 IST Report Abuse
அப்புசாமி கிட்டத்தட்ட 1500 கட்சிகளுக்கு மேல நீக்கினாங்களே... இந்தக் கட்சி இன்னும் இருக்குதா?
Rate this:
05-அக்-202220:01:23 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்........
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
05-அக்-202208:48:41 IST Report Abuse
Karthikeyan K Y திமுக முஸ்லீம் லகுக்கே விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகள் மதவாதத்தையும் ஜாதிவாதத்தையும் நாம் தமிழர் இனவாதத்தையும் பரப்பி தமிழ் நாட்டை ஒரு தீவிரவாத மாநிலமாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் பி ஜே பி ஒரு மதவாத கட்சி என்று சொல்கிறார்கள் பி ஜே பி எல்லா பண்டிகைக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறது தமிழ்நாட்டில் ஹிந்து வோட்டு வங்கி ஹிந்து கோயில்களையும் சொத்துக்களையும் நகைகளையும் நிலங்களையும் அபகரித்து ஹிந்து மக்களையும் பெண்களையும் வழக்கத்தையும் கேவலமாக பேசி அதன் மூலம் எது உலக மகா வெற்றி கொள்கையை போல திராவிட மாடல் என்று பெயர் வைத்து ஹிந்து மக்களை சித்ரா வதை செய்து கொண்டு இருக்கிறார்கள் . இதனை மனித உரிமை கழகம் தலையிட்டு சீர் செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X