வங்கிகளுக்கு 21 நாள் விடுமுறை?

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : வங்கிகளுக்கு இந்த மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதம் என்பதால், 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளுக்கு விடுமுறை என்பது, மாநிலத்திற்கு மாநிலம்
Banks, Holidays, Social Media, வங்கிகள், விடுமுறை, சமூக வலைதளங்கள்,



சென்னை : வங்கிகளுக்கு இந்த மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதம் என்பதால், 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:


latest tamil news


வங்கிகளுக்கு விடுமுறை என்பது, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தேசிய விடுமுறை தினம் மட்டுமே, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.தமிழகத்தில், இந்த மாதத்தில், 4ல் சரஸ்வதி பூஜை; 5ல் விஜயதசமி; 24ல் தீபாவளி என, மூன்று நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு பொது விடுமுறை. இது தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வழக்கம் போல வங்கிகளுக்கு விடுமுறை.நடப்பு ஆண்டில் அக்., 2ல் ஞாயிறு அன்று வந்ததால் தேசிய விடுமுறை இல்லை.



தமிழகத்தில் அக்டோபரில் மொத்தம் 10 நாட்கள் மட்டுமே, வங்கிகளுக்கு விடுமுறை. இதில், பொது விடுமுறை என்பது மூன்று நாட்கள்தான். எனவே, சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (4)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-அக்-202208:20:36 IST Report Abuse
Natarajan Ramanathan காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடிநபி இரண்டும் ஞாயிறு அன்று வருகிறது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு இந்த மாதம் 12 நாட்கள் விடுமுறை என்பதை எல்லாம் ஏன் யாருமே சொல்வதில்லை?
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
06-அக்-202210:31:19 IST Report Abuse
suresh kumar// மேலும் அரசு அலுவலகங்களுக்கு இந்த மாதம் 12 நாட்கள் விடுமுறை என்பதை எல்லாம் ஏன் யாருமே சொல்வதில்லை?..// அரசு அலுலகங்களில் விடுமுறையென்றாலும் வேலை நாளைன்றாலும் ஒரே லட்சணம்தான் என்பதாலாயிருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X