இது உங்கள் இடம்:கோரிக்கை மனு கொடுத்து இம்சிக்காதீங்க!

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் வி.தினேஷ், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் அமைக்கும் நிதியில், டெல்டா மாவட்டங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைத்தால், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்' என, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை
Farmers, Pen Statue, Karunanidhi, விவசாயிகள், பேனா சிலை, கருணாநிதி நினைவு நூலகம்,  Karunanidhi Memorial Library,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்வி.தினேஷ், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் அமைக்கும் நிதியில், டெல்டா மாவட்டங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைத்தால், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்' என, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், விவசாயிகள் சார்பாக மனு அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி. நாட்டு மக்களின் குறைகளை தீர்க்க நடப்பதல்ல இந்த அரசு.கருணாநிதிக்கு சிலை அமைத்தல், அவரின் சமாதியை மெருகூட்டுதல், அவரின் பெயரில் நுாலகம் அமைத்தல், அவர் பயன்படுத்திய பேனா, பென்சில், எழுதும் அட்டை, மைக் கூடு, சட்டை, வேட்டி, லுங்கி, பனியன், செருப்பு, அமர்ந்திருந்த நாற்காலி, படுத்திருந்த கட்டில், மெத்தை, தலையணை, சாப்பிட்ட தட்டு, தண்ணீர் குடித்த டம்ளர், டீ கப், பயணித்த கார் போன்றவை, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வகையில், 80 அடி, 800 அடி, 8,000 அடி உயரங்களில், தமிழகத்தில் ஆங்காங்கே சிலைகள் வடித்து நிறுத்துவது தான் திராவிட மாடல் அரசு.


latest tamil newsஇவ்வளவு, 'முக்கியத்துவம்' வாய்ந்த நிகழ்வுகளை, மக்கள் வரிப்பணத்திலிருந்து மட்டுமின்றி, உலகில் உள்ள அத்தனை நாடுகள் மற்றும் உலக வங்கியிடம் கடன் வாங்கியும், இந்த அரசு நிலை நிறுத்தும். இப்படிப்பட்ட முக்கியமான பணியில் தி.மு.க., அரசு ஈடுபட்டிருக்கும் போது, டெல்டாவில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வலியுறுத்தி, கோரிக்கை வைப்பது வேடிக்கையாக உள்ளது.விளைந்த பயிர் அழுகினால் என்ன, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் நாசமானால் என்ன? சென்ற ஆண்டு மழையில் நனைந்து, நெல் மூட்டைகள் பாழான போதே, அவற்றை மழையில் நனையாமல் பாதுகாக்க, தார்பாலின்கள் கூட வாங்கி தராத அரசு இது.திராவிட மாடல் அரசுக்கு, பயிர்கள் பாழாவதை விட, உணவுப் பொருட்கள் வீணாவதை விட, கருணாநிதியின் புகழை பரப்புவதே முக்கியமான பணி; அதைத்தான் முனைந்து செயல்படுத்தி வருகிறது.


latest tamil newsபேனா சிலை நிறுத்தி வைக்க, மத்திய அரசு கூட மறுப்பேதும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்க.ஆகவே, திராவிட மாடல் அரசு, ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது, அனாவசியமான கோரிக்கைகளை மனுவாக கொடுத்து, இம்சிக்க வேண்டாம் விவசாயிகளே; இதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்வது நல்லது.lll


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
05-அக்-202220:41:31 IST Report Abuse
Soumya திராவிஷ மாடல் என்றாலே மக்களை ஏமாற்றுவதில் கில்லாடி அதிலும் டுபாக்கூர் புரூடா விடியல் சூப்பர்
Rate this:
Cancel
05-அக்-202220:20:48 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இதே விவசாயிகள்தான் திமுக ஆட்சிக்கு வர பேருதவி செய்தார்கள் ........... பிஜேபி அரசை விவசாயத் சீர்திருத்த சட்டத்தை வைத்து வாயில் வந்தபடி விமர்சித்தார்கள் .....
Rate this:
Cancel
05-அக்-202219:51:31 IST Report Abuse
Dhandapani R ,,,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X