வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.
தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் தொழில், வேலை என சென்னையில் வசிக்கின்றனர். அக்.,24ல் தீபாவளி பண்டிகை, 2023 ஜன.,ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அச்சமயத்தில் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவர்.
விமான கட்டணம் ரூ.15 ஆயிரம் வரை இருக்கும். இதனால் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஊருக்கு வருவதில் சிரமம் ஏற்படும்.அதேசமயம் குறைந்த கட்டணம், கழிப்பறை வசதி, நிம்மதியான துாக்கம், பாதுகாப்பு காரணங்களால் பலர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். மதுரையை மையமாக வைத்து தீபாவளி, பொங்கல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவது வழக்கம். தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களான பாண்டியன், கன்னியாகுமரி, முத்துநகர், செந்துார், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.
![]()
|
மதுரை வழியாக இரட்டை ரயில்பாதை வசதி உள்ளது. ரயில்வேக்கு வருவாயை பெருக்க மற்றும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை பகலில் இயக்க வேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில்போல் இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும்.