11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி : 'நாடு முழுதும், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கண் வங்கிகள் செயல்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலர், நாட்டில் உள்ள கண் வங்கிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு
மாநிலங்கள், யூனியன் பிரததேசம், கண் வங்கி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி : 'நாடு முழுதும், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கண் வங்கிகள் செயல்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலர், நாட்டில் உள்ள கண் வங்கிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:

நாடு முழுதும், 320 கண் வங்கிகள் செயல்படுகின்றன. அந்தமான் மற்றும் நிக்கோபர், ஜம்மு - காஷ்மீர் உட்பட எந்த யூனியன் பிரதேசத்திலும் கண் வங்கிகள் செயல்படவில்லை. இவை தவிர, 11 மாநிலங்களிலும் கண் வங்கிகள் செயல்படவில்லை.திரிபுரா, உத்தரகண்ட், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கண் வங்கி மட்டுமே செயல்படுகிறது.


latest tamil news


அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 74, உத்தர பிரதேசத்தில் 41, கர்நாடகாவில் 32, குஜராத்தில் 25 கண் வங்கிகள் செயல்படுகின்றன. கொரோனா பாதிப்புக்குப் பின், கண்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற வகையில் கண் வங்கிகளில் இருப்பு இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரபல கண் மருத்துவர் மணீஷ் ஆச்சர்யா கூறுகையில், ''நாட்டில் உள்ள பெரும்பாலான கண் வங்கிகள் பெயரளவுக்கே செயல்படுகின்றன. ''ஒரு சில வங்கிகள் மட்டுமே, போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் இயங்குகின்றன. இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (5)

HONDA -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202210:07:34 IST Report Abuse
HONDA bjp வந்து எல்லாம் போச்சா தெரிந்துகொண்டால் சரி
Rate this:
05-அக்-202211:43:39 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்அடேய்... உன் காங்கிரஸ் ஆண்ட லட்சணம் தொண்ணூறுகளின் இறுதிவரை கூட நம்மை மூன்றாம் உலக நாடான இந்தியா என்றுதான் அழைத்தனர் ....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-202207:25:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அவை அனைத்துமே பாஜாக்கா ஆளும் மாநிலங்கள் தான் என்பது சிறப்பான ஹைலைட்.
Rate this:
05-அக்-202220:07:54 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்"Eleven states and Union Territories Andaman and Nicobar Islands, Arunachal Pradesh, Dadra and Nagar Haveli, Daman and Diu, Goa, Jammu and Kashmir, Lakshadweep, Manipur, Meghalaya, Nagaland and Sikkim have no functional eye banks, it said." இதுல எத்தனை இடத்துல பிஜேபி தொடர்ந்து நாடாளுது ? ....... நீயி ஜிகேல வீக்னனு தெரியும் .... உனக்கு காமன்சென்ஸ் இல்லன்னு இப்பத்தான் தெரியும் ........
Rate this:
Cancel
05-அக்-202207:23:05 IST Report Abuse
ஆரூர் ரங் கண் தானம், உடல் தானம் செய்தால் மட்டுமே அரசு இடஒதுக்கீடு, மற்ற சலுகைகள் என்று கொண்டு வரலாம். உடற்தகுதியுள்ள அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது குருதிக் கொடை அளிக்க விதிகள் உருவாக்கப்பட வேண்டும். 🤔சிறுபான்மையினருக்கு கஷ்டம் என்பதெல்லாம் நவீன உலகில் ஏற்கத்தக்கதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X