கூட்டுறவு வங்கி கடன் சங்கங்களில் நகைக்கடனுக்கு கூடுதல் வட்டி

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மதுரை : தேசிய வங்கிகளை விட கூட்டுறவு வங்கி, கடன் சங்கங்களில் நகைக்கடனுக்கு கூடுதல் வட்டி விதிப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தேசிய வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதில்லை என கூட்டுறவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூறியதாவது:
National Bank, Cooperative Bank, Jewelery Loan, தேசிய வங்கி, கூட்டுறவு வங்கி, நகைக்கடன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



மதுரை : தேசிய வங்கிகளை விட கூட்டுறவு வங்கி, கடன் சங்கங்களில் நகைக்கடனுக்கு கூடுதல் வட்டி விதிப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.



தேசிய வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதில்லை என கூட்டுறவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூறியதாவது: கேரளாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறையில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. நபார்டு வங்கியிலிருந்து குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி கூட்டுறவு வங்கிகள் குறிப்பிட்ட சதவீதம் வட்டி சேர்த்து நேரடியாக தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு கடன் வழங்குகின்றன.


latest tamil news



இதனால் அங்கு நகைக்கடனுக்கான வட்டி விகிதம் குறைவு.தமிழகத்தில் மூன்றடுக்கு முறை பின்பற்றப்படுகிறது. நபார்டு வங்கியிருந்து 6 சதவீத வட்டிக்கு கடன் பெறும் கூட்டுறவு வங்கிகள் மாவட்ட வங்கிகளுக்கு 8 சதவீதத்தில் தருகின்றன.அங்கிருந்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 8.5 சதவீத வட்டிக்கு அனுப்பப்படுகிறது. 3வது அடுக்கில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 9.5 சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. கடைசியாக வாடிக்கையாளர்களுக்கு 11 சதவீத வட்டியில் நகைக்கடன் கிடைக்கிறது.தேசிய வங்கிகளில் இதில் பாதியளவு வட்டியே பயிருக்கான நகைக்கடனாக வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையான நகைக்கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கின்றனர். இதற்கு 10 சென்ட் வீட்டடி மனையை காண்பித்து கூட கடனாக மாற்றுகின்றனர். ஆனால் கூட்டுறவு வங்கி, கடன் சங்கங்களில் 5 ஏக்கர் நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல், பயிர் சாகுபடி குறித்த தகவல்களை தந்தால் மட்டுமே பயிருக்கான நகைக்கடனாக ரூ.3 லட்சம் வரை குறைந்த வட்டிக்கு வழங்குகிறோம்.



எங்களிடம் கம்மல், தோடு, மூக்குத்தி போன்ற சிறு நகைகளை வைத்துக் கூட கடன்பெறலாம். ஆனால் வட்டி அதிகம் என்பதால் அடகுக்கடைகளுக்கு செல்கின்றனர். தேசிய வங்கிகளில் குறைந்தது ஒரு பவுன் அளவுக்கு இருந்தால் மட்டுமே நகைக்கடன் பெறமுடிகிறது. அங்கு வட்டி குறைவு என்பதால் வட்டிக்கு விடுபவர்கள் அங்கே செல்கின்றனர்.வட்டி ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான். எனவே அரசு இரண்டடுக்கு முறையை கொண்டு வருவதோடு பயிருக்கான நகைக்கடன் விதிமுறையில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Tamilnadu,இந்தியா
05-அக்-202221:32:27 IST Report Abuse
Ramesh Pls step
Rate this:
Cancel
Ramesh - Tamilnadu,இந்தியா
05-அக்-202221:31:51 IST Report Abuse
Ramesh Enathu pothuu nagai kadan innum thallupadi agala pls. Karur velliyanai.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
05-அக்-202208:03:54 IST Report Abuse
Ravichandran Narayanaswamy கூட்டுறவு சங்கங்கள் உருவானதே ஏழை விவசாயிகளுக்காகவும், தொழில் செய்யும் சிறு குறு அதிபர்களுக்காகவும் தற்காலிக ஏழ்மையை குறைக்க கடன் கொடுக்கத்தான். அந்த காலத்தில் கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்தியவர்கள் "நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக" இருந்தார்கள். ஆனால் இப்போது இருப்பவர்கள் எல்லாமே இலவசமாக கடனை பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆதலால் கூட்டுறவு வங்கிகளை அரசு மூடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X