அமைச்சர் ஒப்புதல் இன்றி மின் சீரமைப்பு பணிகளில் தாமதம்; 13 லட்சம் யூனிட் இழப்பு;

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
கம்பம்: அமைச்சர் ஒப்புதல் பெறுவதில் தாமதம் நிலவுவதால் தேனி மாவட்டம் சுருளியாறு மின் நிலையத்தில் 13 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யாமல் வாரியத்திற்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டம் மேகமலையில் சேகரமாகும் தண்ணீர் இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகள் வழியாக இரவங்கலாறு அணையில் சேமிக்கப்படும். இரவங்கலாறு அணையிலிருந்து 971 மீ.,உயரத்திற்கு குழாய்
மின் பராமரிப்பு, சுருளியாறு, மின் நிலையம், யூனிட் இழப்பு, கோடி ரூபாய் இழப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கம்பம்: அமைச்சர் ஒப்புதல் பெறுவதில் தாமதம் நிலவுவதால் தேனி மாவட்டம் சுருளியாறு மின் நிலையத்தில் 13 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யாமல் வாரியத்திற்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டம் மேகமலையில் சேகரமாகும் தண்ணீர் இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகள் வழியாக இரவங்கலாறு அணையில் சேமிக்கப்படும்.

இரவங்கலாறு அணையிலிருந்து 971 மீ.,உயரத்திற்கு குழாய் அமைத்து வண்ணாத்திபாறை பகுதியில் உள்ள சுருளியாறு மின் நிலையத்தித்திற்கு தண்ணீரை இறக்கி மின் உற்பத்தி நடக்கிறது.மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் 1978ல் இந்த மின்நிலையம் துவக்கப்பட்டது. ஆசியாவில் உயரமான இடத்தில் இருந்து தண்ணீரை இறக்கி மின் உற்பத்தி செய்யப்படுவதில் 2 வது இடத்தை பெறுகிறது.latest tamil news


இங்கு ஆஸ்திரிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்த 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஜெனரேட்டர் உள்ளது.தினமும் மின் தேவை அதிகரிப்பால் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின் உற்பத்தி நடக்கும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி வீதம் ஒரு நாளைக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.


கோடைகாலத்தில் உற்பத்தி:ஆண்டுதோறும் மின் உற்பத்தி செய்தாலும் கோடை காலத்திலும் இங்கு மின் உற்பத்தி தனி சிறப்பு ஆகும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கயத்தாறு மின்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பிற மாவட்டங்களுக்கு வழங்கப்படும். இரவங்கலாறு அணையிலிருந்து குழாய் வழியாக 141 கனஅடி நீரை இறக்கி 35 மெகாவாட் தயாரிக்கலாம். ஆனால் லோயர்கேம்பில் உள்ள மின்நிலையத்தில் 35 மெகாவாட் தயாரிக்க 400 கனஅடி வரை தண்ணீர் தேவைப்படும்.


குழாய் சேதம்இரவங்கலாறு அணையிலிருந்து 2021 செப்., 4 ல் தண்ணீர் திறந்த போது குழாய் உடைந்தது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, சுருளியாறு மின்நிலையம் மூடப்பட்டதால் 13 மாதங்கள் மின் உற்பத்தி நடக்கவில்லை. 13 மாதங்களில் குறைந்தது 13 லட்சம் யூனிட் மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கனமழை பெய்தும் தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.அதிகாரிகள் கூறுகையில்,'குழாய் சீரமைப்பு பெரிய வேலை என்பதால் அமைச்சரின் ஒப்புதல் பெறுவதில் காலதாமதமாகிறது. மேலும் மழை காலங்களில் வெல்டிங் செய்ய முடியாது என்பதாலும் பணிதுவக்க முடியவில்லை,' என்றனர்.மின்வாரியத்தின் அலட்சியத்தால் ரூ.பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைந்து பணிகளை துவக்கி மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogeshananda - Erode,இந்தியா
05-அக்-202212:12:28 IST Report Abuse
Yogeshananda அந்த அமைச்சன்////////
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
05-அக்-202211:47:47 IST Report Abuse
Nakkeeran இன்னும் பெ ட்டி வரல
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202210:32:13 IST Report Abuse
duruvasar நிர்வாக திறனுக்கும் விடியல் அரசுக்கும் என்னங்க சம்பந்தம். வீரமணி ஒழுங்காக சந்தியாவந்தனம் செய்வதில்லை என குற்றச்சாட்டு வைப்பதைப் போல் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X