ஜி.பி.எஸ்., முறையில் ஜனவரி முதல் சுங்க வசூல்?

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில், சுங்க கட்டணம் வசூலிக்க, 'பாஸ்டேக்' திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் வங்கிகள், பணப் பரிமாற்ற வங்கிகள் வாயிலாக, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர்கள்
Chennai, National Highway, Tollgate, சென்னை, தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடிகள், ஜிபிஎஸ், பாஸ்டேக், Tollbooths, GPS, Fastag,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில், சுங்க கட்டணம் வசூலிக்க, 'பாஸ்டேக்' திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் வங்கிகள், பணப் பரிமாற்ற வங்கிகள் வாயிலாக, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன.வாகனங்கள் செல்லும்போது சுங்கச்சாவடிகளில் உள்ள மின்னணு கருவி வாயிலாக, வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழித்து கொள்ளப்படுகிறது.


latest tamil news


இதன் வாயிலாக வாகனங்கள் காத்திருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாகனங்களின் காத்திருப்பு தொடர்கிறது.பாஸ்டேக் நடைமுறை தோல்வி அடைந்துள்ளதால், வெளிநாடுகளில் உள்ளது போல, ஜி.பி.எஸ்., முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.



இதற்காக, சுங்கச்சாவடிகளின் அருகில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட உள்ளன. வாகனங்கள், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக அடையாளம் காணப்பட்டு, சுங்கக் கட்டணம், வங்கிக் கணக்குகளில் இருந்து கழித்துக் கொள்ளப்பட உள்ளது.



இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சுங்க கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்லவும் அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், சோதனை முறையில் அடுத்த ஆண்டு ஜனவரியில், இந்த திட்டத்தை பல்வேறு சுங்கச்சாவடிகளில் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து உள்ளது.


இதற்காக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் உள்ள 10 சுங்கச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202221:47:06 IST Report Abuse
அப்புசாமி ஃபாஸ்ட் டேக் நு போட்டு சில கார்ப்பரேட்களுங்கு அள்ளிக்குடுத்தாங்க. இப்போ அது தோல்வியாம். பேசாம கார் விக்கும் போதே ஒரு 20 வருஷத்துக்கு டோல் வசூல்.பண்ணிடுங்க. போனாலும், போகாட்டாலும் அவன் பொறுப்பு.
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
05-அக்-202211:40:56 IST Report Abuse
Raa கொள்ளை கொள்ளை கொள்ளை.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
05-அக்-202209:33:00 IST Report Abuse
N Annamalai சுங்கச்சாவடிகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ளதால் இங்கு தான் சோதனை செய்து பார்க்க வேண்டும். வேறு இடத்தில் பார்த்தால் அடிப்பார்கள். நாம் வரிவசூலையும் கொடுத்து விட்டு இப்படி தினம்தோறும் அவர்களுக்கு காசுகொடுக்கிறோம். அரசியல்வாதிகளுக்கு இதை வருமானம் போகிறதால் இதை நிருதிஹா முடியாது என்றும் சொல்கிறார்கள்
Rate this:
visu - tamilnadu,இந்தியா
05-அக்-202216:13:53 IST Report Abuse
visuஇது போல சுங்க சாவடி விவரம்...............உள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X