52.81 லட்சம் பனை விதைகள் நட்டு சாதனை

Added : அக் 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், 5 மணி நேரத்தில், 52 லட்சத்து, 81 ஆயிரம் பனை விதைகள் நட்டு, புதிய உலக சாதனை செய்யப்பட்டது.'எலேட் வேர்ல்ட் ரெக்கார்டு, ஏசியன் ரெக்காட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்காட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய நான்கு உலக சாதனைகளில் இடம் பெற வேண்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.இதற்காக ராணிப்பேட்டை
Palm Seed, Ranipet, Green Tamil Nadu,பனை விதை, ராணிப்பேட்டை, பசுமை தமிழகம்,



ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், 5 மணி நேரத்தில், 52 லட்சத்து, 81 ஆயிரம் பனை விதைகள் நட்டு, புதிய உலக சாதனை செய்யப்பட்டது.'எலேட் வேர்ல்ட் ரெக்கார்டு, ஏசியன் ரெக்காட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்காட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய நான்கு உலக சாதனைகளில் இடம் பெற வேண்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.



இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்கள், 288 கிராம ஊராட்சிகள், 880 இடங்களில் 52 லட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை, 80 ஆயிரம் பேர் நட்டனர். இதற்கான பணி நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடந்தது.இதற்கான சான்றிதழை இந்த நிறுவன அதிகாரிகள், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோரிடம் நேற்று வழங்கினர்.கைத்தறி துறை அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:



பசுமை தமிழகம் திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பசுமை பரப்பை, 33 சதவீதம் உயர்த்த மரம் நடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பனை மரம் நிலத்தடி நீரை சேமித்து வறட்சி காலத்தில் பலன் அளிக்கும். தமிழகத்தில் 38 மாவட்டங்களில், 28 லட்சம் பனை மரங்கள் மட்டுமே உள்ளன.ஆனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 52.81 லட்சம் பனை மர விதைகள் நடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மரங்களை விட இரண்டு மடங்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மூன்று மாதமாக, 50 லட்சம் பனை மர விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
05-அக்-202210:33:46 IST Report Abuse
ديفيد رافائيل இதை வளர்க்கனும் அது தான் முக்கியம். இல்லைன்னா no use
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
05-அக்-202209:37:26 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan எத்தனை முளைத்தது, எத்தனை வளர்ந்தது என்று சாதனை விளக்க அறிக்கை வருமா? நிஜமாகவே அத்தனை பனை விதைகள் எப்படி கிடைத்தது? எவ்வளவு ஆழம் - அகலம் குழி தோண்டப்பட்டது? என்ன அடி உரம் இடப்பட்டது? ஒவ்வொரு விதை ஊன்றிய இடத்திலும் அடையாள குறியீடு செய்யப்பட்டதா? உயிர் நீர் ஊற்றப்பட்டதா? சில மாதங்களுக்கு தொடர் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதா? இல்லை வழக்கம் போல... வெற்று அறிக்கை, போட்டோ ஷூட், செலவு கணக்கு எழுதி பணம் சுருட்டப்பட்டதா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202208:39:17 IST Report Abuse
duruvasar நீலா விடுவதற்க்கு கிடைக்கும் எல்லா அகில உலகு பரிசுகளும் திராவிட மாடலுக்கு மட்டும்தான் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X