6 மாதத்தில் பத்திர பதிவு வருவாய் ரூ.8,696 கோடி!

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில், பத்திரப்பதிவு வாயிலாக, 8,696 கோடி ரூபாய்; வணிக வரித்துறை வாயிலாக 66 ஆயிரத்து 161 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, பதிவுத்துறை வருவாய்தான் பிரதான நிதி ஆதாரமாக உள்ளது. இதனால், பத்திரப்பதிவுத் துறையில் இலக்கு நிர்ணயித்து,வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது.கடந்த, 2021 - 22ம் நிதி ஆண்டில், 13
Chennai, Tamil Nadu, Deed Registry, பத்திரப்பதிவு, வணிக வரித்துறை, சென்னை, தமிழகம்,  Commercial Tax Department,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில், பத்திரப்பதிவு வாயிலாக, 8,696 கோடி ரூபாய்; வணிக வரித்துறை வாயிலாக 66 ஆயிரத்து 161 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, பதிவுத்துறை வருவாய்தான் பிரதான நிதி ஆதாரமாக உள்ளது.



இதனால், பத்திரப்பதிவுத் துறையில் இலக்கு நிர்ணயித்து,வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது.கடந்த, 2021 - 22ம் நிதி ஆண்டில், 13 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் இலக்கு, 2022 - 23ம் நிதி ஆண்டில், 15 ஆயிரம் கோடியாகஉயர்த்தப்பட்டது.இதுகுறித்து, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை:கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டில் பதிவுத்துறையில் வருவாய் ஈட்டுவது வெகுவாக அதிகரித்து வருகிறது.


latest tamil news



ஏப்., 1 முதல், செப்., 30 வரையிலான ஆறு மாத காலத்தில், 17.56 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, 8,696 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்த நிதி ஆண்டில் வசூலான, 6,208 கோடி ரூபாயை விட, 2,488 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் ஈட்டி, பதிவுத்துறை சாதனை படைத்து உள்ளது.



வணிக வரி வருவாய்ரூ.66,161 கோடி


வணிக வரித் துறையில் நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்., வரையிலான ஆறு மாதங்களில், 66 ஆயிரத்து 161 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இது, 2021ம் ஆண்டில் ஆறு மாதத்தில் வசூலான, 47 ஆயிரத்து 873 கோடியை விட, 18ஆயிரத்து 288 கோடி ரூபாய் அதிகம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
05-அக்-202208:08:00 IST Report Abuse
GMM அரசு நிலம், வக்ப் வாரிய நிலம், பஞ்சமி நிலம், கிருத்துவ நிலம் என பதிவு செய்ய முடியாத பல வகை நிலங்கள் இருந்தும் (தமிழகத்தில் மட்டும்) பத்திர பதிவு வருவாய் குறையவில்லை. பத்திர பதிவில் ஒரு குறிப்பிட்ட சதவீத கட்டணம் பட்டா வழங்க நிர்ணயித்தால் பட்டா பெறுவது எளிது. அரசுக்கு வருவாய் கூடும். நில தாவா வழக்கு செலவு அரசு நிர்ணய நில விலையை விட அதிகம்? காரணம் பத்திர பதிவில் தவறுகள்?
Rate this:
Cancel
Srinivasan - Chennai,இந்தியா
05-அக்-202207:51:43 IST Report Abuse
Srinivasan இ சேவை மூலம் இப்போது பிறந்த சான்றிதழ் ஜாதி சான்றிதழ் கிடைப்பது போன்று சரியான முறையில் பத்திர பெயர் மாறுதல், வில்லங்க பத்திரம் பெறுதல் போன்ற பலசேவைகளை விரைவாக செய்தால் நடுவில் இடைத்தரகர்களுக்கு தரும் பணத்தில் வெறும் ஒரு பத்து சதவீதம் அரசாங்த்திற்கு நேரடியாக சென்றால் போதும் இதை விட பல மடங்கு வருவாய் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X