வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : மத்திய மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், வரும், 7, 8ம் தேதிகளில், 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதனால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். வரும், 7, 8ம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், 7, 8ம் தேதிகளில் கனமழை பெய்யும்.
![]()
|
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக கோவை, ஆனைப்பாளையத்தில், 2 செ.மீ., வேடசந்துார், சித்தார், காங்கேயத்தில் 1 செ.மீ., மழை பெய்துள்ளது.குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.