சட்ட விரோத மின் பயன்பாடு புகார்; விழிப்புணர்வு ஏற்படுத்தாத மின் வாரியம்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : மின் வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், சட்ட விரோத மின் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்கும் வசதி குறித்த விபரம், மக்களுக்கு தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதித்துள்ள விதிகளின்படி, வீடுகள், அலுவலகம் போன்ற கட்டுமானங்களை கட்டுவோருக்கு மட்டுமே, மின் வாரியம் சார்பில், புதிய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.இழப்புசிலர், நீர்
Electricity Theft, Awareness, TNEB, மின் திருட்டு, மின் வாரியம்,  விழிப்புணர்வு, தமிழக அரசு,  Electricity Board,  Government of Tamil Nadu,


சென்னை : மின் வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், சட்ட விரோத மின் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்கும் வசதி குறித்த விபரம், மக்களுக்கு தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதித்துள்ள விதிகளின்படி, வீடுகள், அலுவலகம் போன்ற கட்டுமானங்களை கட்டுவோருக்கு மட்டுமே, மின் வாரியம் சார்பில், புதிய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.


இழப்பு



சிலர், நீர் நிலைகள், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டுகின்றனர். அவற்றுக்கு விதிகளை மீறி, மின் இணைப்பும் பெறுகின்றனர். இது தவிர, வீட்டு மின் இணைப்பு பெற்று, கடைகள் போன்ற வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது, ஒரே மின் இணைப்பை பெற்று விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி பயன்படுத்துவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.



latest tamil news


இதனால் மின் வாரியத்திற்கு பல நுாறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. சட்ட விரோத மின் பயன்பாடு தொடர்பாக, மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவு பொறியாளர்களின் மொபைல் போன் எண், மின்னகம் சேவை மையத்தில் புகார் அளிக்கும் வசதி உள்ளது.முறைகேடுகளுக்கு அரசியல் கட்சியினர், சில மின் வாரிய பொறியாளர்களே உடந்தையாக உள்ளனர். இதனால் அனைத்து பகுதிகளிலும், சட்ட விரோத மின் பயன்பாட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து, சட்ட விரோத மின் பயன்பாடு தொடர்பாக, www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கும் வசதியை ஆக., 1ல் மின் வாரியம் துவக்கியது.


விழிப்புணர்வு இல்லை



இணையதளத்தில் 'முறையற்ற மின் பயன்பாடா' என்ற பகுதிக்குச் சென்று, மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்து, சட்ட விரோதமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் முகவரியை பதிவிட வேண்டும்.அந்த முகவரியில் மின் வாரிய அதிகாரிகள் ரகசிய ஆய்வு செய்து, மின் இணைப்பைத் துண்டித்து, அபராதம் வசூலிப்பர்.புகார் அளிப்போர் விருப்பப்பட்டால் தன் பெயர், முகவரியை தெரிவிக்கலாம். இல்லையேல், புகார் மட்டும் பதிவிடலாம்.

இந்த சேவை தொடர்பாக மின் வாரியம் இதுவரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் உள்ளது.இதனால் சட்ட விரோத மின் இணைப்பை துண்டிக்க புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தியும், அந்த சேவை விபரம் பலருக்கு தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரியத்திடம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் மொபைல் போன் எண்கள் உள்ளன. அந்த எண்களுக்கு சட்ட விரோத மின் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்கும் சேவை குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மேலும், மின் வாரிய சமூக வலைதள கணக்குகளில் பதிவிடலாம். அப்போது தான், புகார் அளிக்கும் சேவை குறித்த விபரம், அனைத்து மக்களையும் சென்றடையும். அதைப் பார்த்து, பலரும் புகார் அளிக்க முன்வருவர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-அக்-202216:23:38 IST Report Abuse
Bhaskaran சென்னையிலகுடிசைப்பகுதிகளில் சாவு வீடுகள் கோவில் திருவிழாக்கள் கட்சி மீட்டிங் போன்றவற்றிற்கு திருட்டு மின்சாரம்தான் இது எழுதப்படாத சட்டம் அரசுக்கும் தெரியும் ......
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202209:17:05 IST Report Abuse
duruvasar முதலில் மின்துறை அமைச்சகம் ஊரை ஏமாற்றும் இந்த மோசமான தொழிலை கைவிடவேண்டும். கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டு நடத்திய திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுகூட்டத்திற்க்காக கொக்கி போட்டு கரண்டு திருடிய வீடியோ வந்தது. அந்த மேட்டரில் எத்தனை ...என முதலில் தெரிவியுங்கள். ஆளும் கட்சியின் திருட்டை அதிகாரிகளே கண்டுக்க மாட்டார்களாம், பொதுமக்கள் புகார் கொடுக்கவேண்டுமாம். எதற்கு? ஆளை அடையாளம் காட்டி பொய்வழக்கில் உள்ள தள்ளுவதற்காகவா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X