சென்னை : மின் வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், சட்ட விரோத மின் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்கும் வசதி குறித்த விபரம், மக்களுக்கு தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதித்துள்ள விதிகளின்படி, வீடுகள், அலுவலகம் போன்ற கட்டுமானங்களை கட்டுவோருக்கு மட்டுமே, மின் வாரியம் சார்பில், புதிய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
இழப்பு
சிலர், நீர் நிலைகள், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டுகின்றனர். அவற்றுக்கு விதிகளை மீறி, மின் இணைப்பும் பெறுகின்றனர். இது தவிர, வீட்டு மின் இணைப்பு பெற்று, கடைகள் போன்ற வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது, ஒரே மின் இணைப்பை பெற்று விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி பயன்படுத்துவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
![]()
|
விழிப்புணர்வு இல்லை
இணையதளத்தில் 'முறையற்ற மின் பயன்பாடா' என்ற பகுதிக்குச் சென்று, மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்து, சட்ட விரோதமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் முகவரியை பதிவிட வேண்டும்.அந்த முகவரியில் மின் வாரிய அதிகாரிகள் ரகசிய ஆய்வு செய்து, மின் இணைப்பைத் துண்டித்து, அபராதம் வசூலிப்பர்.புகார் அளிப்போர் விருப்பப்பட்டால் தன் பெயர், முகவரியை தெரிவிக்கலாம். இல்லையேல், புகார் மட்டும் பதிவிடலாம்.
இந்த சேவை தொடர்பாக மின் வாரியம் இதுவரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் உள்ளது.இதனால் சட்ட விரோத மின் இணைப்பை துண்டிக்க புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தியும், அந்த சேவை விபரம் பலருக்கு தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரியத்திடம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் மொபைல் போன் எண்கள் உள்ளன. அந்த எண்களுக்கு சட்ட விரோத மின் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்கும் சேவை குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மேலும், மின் வாரிய சமூக வலைதள கணக்குகளில் பதிவிடலாம். அப்போது தான், புகார் அளிக்கும் சேவை குறித்த விபரம், அனைத்து மக்களையும் சென்றடையும். அதைப் பார்த்து, பலரும் புகார் அளிக்க முன்வருவர்.இவ்வாறு அவர் கூறினார்.