உத்தரகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பவுரி கர்வால் பகுதியில் நேற்று(அக்., 04) இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து
Bus, Wedding Party,  Uttarakhand, Gorge, உத்தரகண்ட்,  பள்ளத்தாக்கு, பஸ், பலி, விபத்து,

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



பவுரி கர்வால் பகுதியில் நேற்று(அக்., 04) இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



latest tamil news



அதில் 25 பேர் உயிரிழந்த நிலையில் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.




இரங்கல்



இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதி திரவுபதி முர்மு


உத்தரகண்டில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.


பிரதமர் மோடி


உத்தரகண்டில் பஸ் விபத்து செய்தி மனதை பாதித்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நினைவாக எனது என்னங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202221:42:29 IST Report Abuse
அப்புசாமி உத்தரகாண்டில் விபத்து நடந்தா பிரதமர், ஜனாதிபதி இரங்குவாங்க. தமிழ்நாட்டில்.நடந்த கண்டுக்க மாட்டாங்க. ஆனா, தமிழ்நாடு மேலே தனிப்பட்ட பாசம் வெச்சிருப்பதா தினமலர் செய்தி போடும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-அக்-202216:45:09 IST Report Abuse
Natarajan Ramanathan உத்தராகண்ட் போன்ற முழுவதும் மலைப்பாங்கான மாநிலத்தில் சாலை போடுவதும் அதை பராமரிப்பதும் மிகவும் சவாலான விஷயம். இங்கே சமமான நிலப்பரப்பு உள்ள தமிழகத்திலேயே சாலைகள் மோசமாக இருக்கின்றன.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
05-அக்-202215:15:55 IST Report Abuse
Tamilan இது, நீலகிரி, அணைத்து மலை பிரதேசங்களிலும். இதெல்லாம் காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X