கொரோனாவில் 'அத்துமீறிய' இளசுகள்: ஆதரவற்ற குழந்தைகள் அதிகரிப்பு

Added : அக் 05, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சிவகங்கை: கொரோனா காலத்தில் அத்துமீறிய இளசுகளால் சிவகங்கை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அன்பு காட்ட அன்னையும், தட்டி கொடுக்க தந்தையும், சண்டை போடா சகோதரியும், தூக்கி கொஞ்ச சொந்தமும், வெற்றி பெற எதிரியும், காட்டி கொடுக்க துரோகியும், உயிர் கொடுக்க நண்பனும், உயிரை எடுக்க காதலியும், என்னை காக்க கடவுளும் இல்லை. பாவம் அனாதையாக நான்,'' என
Destitute Children, Corona,Sivaganga, கொரோனா, ஆதரவற்ற குழந்தைகள், சிவகங்கை,  orphans,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிவகங்கை: கொரோனா காலத்தில் அத்துமீறிய இளசுகளால் சிவகங்கை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அன்பு காட்ட அன்னையும், தட்டி கொடுக்க தந்தையும், சண்டை போடா சகோதரியும், தூக்கி கொஞ்ச சொந்தமும், வெற்றி பெற எதிரியும், காட்டி கொடுக்க துரோகியும், உயிர் கொடுக்க நண்பனும், உயிரை எடுக்க காதலியும், என்னை காக்க கடவுளும் இல்லை. பாவம் அனாதையாக நான்,'' என சிவகங்கை மாவட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் பச்சிளம் குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் சிவகங்கை. இங்கு 445 ஊராட்சிகளில் 12,000 குக்கிராமங்கள் உள்ளன. 2 ஆண்டுகளாக கொரோனாவால் வேலைவாய்ப்பு இன்றி, பள்ளிகளும் மூடப்பட்டன.வீட்டில் முடங்கியதால் கர்ப்பம் தரிப்பது அதிகரித்தது. இக்கால கட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் மாதத்திற்கு 200 பிரசவங்கள் வரை அதிகரித்தன. அதேநேரம் திருமண வயதை எட்டாத சிறுமிகள் காதல் வயப்படுதலும் அதிகரித்தது. திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 'போக்சோ' சட்டத்தின் கீழ் செப்., வரை 9 மாதங்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.latest tamil newsஆதரவற்ற குழந்தைகள் அதிகரிப்பு

இருப்பினும் அத்துமீறலில் பல சிறுமிகள் கர்ப்பிணியாகின்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. வழக்கமாக இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு 5 முதல் 9 குழந்தைகள் இவ்வாறு ஒப்படைக்கப்படும். ஆனால் 2022 ஜனவரி முதல் செப்., வரை 9 மாதங்களில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கு கொரோனாவின் 'பக்க விளைவே' முக்கிய காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஒருவர் கூறியதாவது: இக்குழந்தைகளை மதுரையில் உள்ள தொண்டு நிறுவன கண்காணிப்பில் விட்டுள்ளோம். சிறுமிகள் கர்ப்பிணியாவதை தடுக்க பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்துகிறோம். ஆதரவற்ற குழந்தைகளை பாரமரிக்க காரைக்குடி அருகே மானகிரியில் மையம் அமைக்கப்பட உள்ளது, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
06-அக்-202214:24:09 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இளம் வயது பெற்றோர்கள் மற்றும் வயது வந்த பெண்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அந்த குழந்தை எப்படி வாழும் என்று
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05-அக்-202222:52:29 IST Report Abuse
Ramesh Sargam மக்களை நல்ல வழிக்கு கொண்டுவர இறைவன் அப்பஅப்ப ஒரு சில நோய்களையும், வைரஸ்களையும் பரப்பி ஒரு கட்டுப்பாட்டிற்குள் வர முயற்சிக்கிறார். அதாவது சிலவருடங்களுக்கு முன்பு AIDS. அதற்கு முன்பு காலரா. AIDS -க்கு பின்பு இப்ப சில வருடங்களாக corona virus. வந்த புதிதில் மக்களும் உயிருக்கு பயந்து கொஞ்ச நாட்களுக்கு கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். போக போக பயம்போனபின்பு மீண்டும் தங்கள் 'சித்து' வேளையில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட சித்துவேலையில் பிறக்கும் குழந்தைகளை அனாதையாக விட்டுவிடுகிறார்கள். ஆக, கடவுள் நினைத்தது ஒன்று. ஆனால் நடப்பது ஒன்று. பிறகு இப்படிப்பட்ட மக்களை யார்தான் திருத்த முடியும்?
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
05-அக்-202221:35:39 IST Report Abuse
Soumya அநேகமா மூர்க்கனுங்களா தான் இருப்பானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X