எல்லாமே 'பிளஸ் பாயின்ட்' : தென்மாவட்டங்கள் வளராத காரணம் என்ன

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
மதுரை:தமிழக அரசு, தொழில்கள் வளர்ச்சியை சென்னை, கோவையைச் சார்ந்து அகலப்படுத்திக் கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட், போக்குவரத்துக்கான நான்குவழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழில்துறையில் தென்மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளன. இதற்கு முக்கிய காரணம் குறித்து தொழிலதிபர்கள் கூறியதாவது: முதலீட்டாளர்களை
Electricity, South Districts, Madurai, மின்சாரம், தென்மாவட்டங்கள், மதுரை, தமிழக அரசு,  Government of Tamil Nadu,

மதுரை:தமிழக அரசு, தொழில்கள் வளர்ச்சியை சென்னை, கோவையைச் சார்ந்து அகலப்படுத்திக் கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட், போக்குவரத்துக்கான நான்குவழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழில்துறையில் தென்மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளன. இதற்கு முக்கிய காரணம் குறித்து தொழிலதிபர்கள் கூறியதாவது:
முதலீட்டாளர்களை தென்மாவட்டங்களுக்கு அழைக்க வேண்டும்


latest tamil newsஎன். ஜெகதீசன், தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்: வெளிநாட்டு முதலீடுகளை தென்மாவட்டங்களுக்கு கொண்டு வருவதில் நிறைய சிக்கல், சந்தேகம், பயம் உள்ளது. 25 ஆண்டுகள் நடந்த ஸ்டெர்லைட் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் முதலீட்டாளர்களுக்கு தென்மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான நம்பகத்தன்மை போய்விட்டது. இங்கு மட்டும் 150க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. மதுரையில் ரூ.600 கோடியில் ஐ.டி., பார்க் அமைக்க அரசு நிதி ஒதுக்கியது நல்ல விஷயம். சிவில், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கேற்ப தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டாமா.புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு வட்டி மானியம், தடையில்லா மின்சாரம், மின் மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும். மதுரை ஏர்போர்ட் இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை மூடப்படுகிறது. கனெக்டிவிட்டி' விமானத்தில் வருபவர்கள் மதுரையில் எப்படி தொழில் தொடங்க முடியும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 122 தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல தமிழக அரசும் தொழில்வாய்ப்புகளை தென்மாவட்டங்களை நோக்கி திருப்பிவிட்டால் தான் முழு தமிழகமும் வளர்ச்சி பெறும்.
பெருந்தொழில்உருவானால் சிறு,குறுந்தொழில்கள் வளரும்


latest tamil news


Advertisement

கே.பி.முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர், தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பெருந்தொழில்களும், ஈரோடு, திருப்பூர், கோவையில் பெரு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் நிறைய உருவாகியுள்ளன. தென்மாவட்டங்களில் அதற்கான வாய்ப்பே கொடுக்கவில்லை. இங்கு தெர்மல் ஸ்டேஷன், நியூக்ளியர் பிளான்ட், சோலார் பிளான்ட், காற்றாலை என மின்உற்பத்தி சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ளன.ஒரு பெரிய தொழிற்சாலை மதுரையில் உருவானால் அதைச் சார்ந்து நுாற்றுக்கணக்கான சிறு, குறுந்தொழில்கள் உருவாகும். இத்தனைக்கும் இங்கு மதுரை - துாத்துக்குடி தொழிற்சாலை காரிடார், சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை காரிடார் அறிவிக்கப்பட்டுள்ளது. பலன் தான் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு 25 கி.மீ., தொலைவிலும் அரசு சிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். தொழில் தொடங்க வருபவர்களுக்கு இருமடங்கு ஊக்கத்தொகை, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். நிலம் விலை குறைவு, தண்ணீர், மின் வசதி இங்குள்ளதால் முதலீட்டாளர்களை தென்மாவட்டங்களை நோக்கி அரசு திருப்ப வேண்டும்.இங்குள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீத உள்ளூர் மக்கள் இருந்த நிலை மாறி, 80 சதவீத பிறமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இது தொழில்துறையின் நிச்சயமற்ற தன்மையை காட்டுகிறது. போராட்டம் என்ற எதிர்ப்பு மனநிலையை மாற்ற அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சுற்றுலாத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தலாம்


latest tamil news


கே.எல்.குமார், தலைவர், மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கம்: மதுரையை மையப்படுத்தி வரும் படங்களில் அரிவாள், வன்முறை, கட்டப்பஞ்சாயத்து என தவறான விஷயங்களை காண்பித்து திசை திருப்புவதும் தொழில்கள் வளராததற்கு ஒரு காரணம். இங்குள்ள தொழிலாளர்களின் திறமை வீணடிக்கப்படுகிறது.இலங்கை, துபாய்க்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கான விமான சேவையை மதுரையில் இருந்து அதிகப்படுத்தினால் தொழில் வளர்ச்சிக்கு உதவும். மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் என்பதை தாண்டி, கீழடி, கொந்தகை அகழ்வாராய்ச்சியை முன்னிலைப்படுத்தி சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஆன்மிக சுற்றுலாவை அரசு வலுப்படுத்தினால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
ஒற்றை சாளர முறையை சரிசெய்ய வேண்டும்


latest tamil news


ஆர்.ராஜசேகரன், பொதுச்செயலாளர், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அதிபர்கள் சங்கம், திண்டுக்கல்: தொழில் துவங்குவதற்கான அனைத்து அனுமதியையும் பெறக்கூடிய ஒற்றை சாளர றையை மேம்படுத்த வேண்டும். சிறு, குறுந்தொழில் தொடங்குபவர்களுக்கு இடத்தில் ஏற்படக்கூடிய பிரச்னை பெரிய இடையூறாக உள்ளது. ஜி.எஸ்.டி., பில்லில் ஏற்படும் சிறு தவறுக்கு அபராதம் அதிகமாக விதிக்கப்படுகிறது. இதனால் அந்த தொழில்களே முடங்கும் அளவுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது.
முதலீட்டாளர்களுக்கு அரசு உத்தரவாதம் தருமா


latest tamil newsகே.நேரு பிரகாஷ், தலைவர், துாத்துக்குடி மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம்: முதலீட்டாளர்கள் தொழில் தொடங்கவே பயப்படும் அளவிற்கு துாத்துக்குடியில் நிலைமை உள்ளது. நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை மக்கள் எதிர்ப்பால் மூடிவிட்டனர். அந்த ஆலை திறந்தால் தான் முதலீட்டாளர்கள் தென்மாவட்டங்களில் தைரியமாக முதலீடு செய்ய முன்வருவார்கள்.துாத்துக்குடியில் ரூ.49 ஆயிரம் கோடியில் 'ரீபைனரி பிளான்ட்' டுக்கு இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் திட்டத்தை இங்கிருந்து கைவிட்டனர். ரூ.16 ஆயிரம் கோடியில் 'செமி கன்டக்டர் பிளான்ட்' அமைய இருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பால் குஜராத்துக்கு மாற்றி விட்டனர். எதற்கெடுத்தாலும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி எதிர்ப்பை உருவாக்குவதால் உண்மையாகவே மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விமானநிலையம், துறைமுகம், நான்குவழிச்சாலை, தெர்மல் பவர், தண்ணீர் வசதி, நிலவசதி எல்லாம் இருந்தும்மக்களின் எதிர்ப்பால் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர். இதை சரிசெய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.இவற்றை களையெடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தென்மாவட்டங்களை வளரச் செய்வது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது.
latest tamil newsதென்மாவட்டங்களை எடுத்துச் சொன்ன வெளிநாட்டு பயணம்

தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்:தெற்காசியாவில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுவரை வந்துள்ள ரூ.2 லட்சம் கோடி முதலீடுகளில் பெரும்பான்மை தென்மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோலார், கெமிக்கல், உற்பத்தி, புதுப்பிக்கதக்க எரிசக்தி, டெக்ஸ்டைல் துறைகளில் உட்பட தேனி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் புதிய முதலீடுகள் வந்துள்ளன. துாத்துக்குடியில் 'க்ரீன் ைஹட்ரஜன்' திட்டத்தின் மதிப்பு ரூ.48 ஆயிரம் கோடி, கங்கை கொண்டானில் டாடாவின் 'சோலார் பவர் பேனல்' திட்டம், மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா திட்டம் அமைக்கப்படுகிறது.திருநெல்வேலி நாங்குநேரி அருகே 1000 ஏக்கரில் மீண்டும் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. விருதுநகர் அருகே டெக்ஸ்டைல் பூங்காவுக்கான பூர்வாங்க வேலை நடக்கிறது. சமீபத்தில் சென்று வந்த ஜப்பான், கொரிய பயணத்தின் போது முதலீட்டாளர்களிடம் சென்னையின் வடக்கு பக்கம் நோக்கியே வரவேண்டியதில்லை என தெரிவித்துள்ளோம். மதுரை, துாத்துக்குடி தொழில்வளம் மிக்க பகுதியாக மாறிவருகிறது. இங்கு 2 விமானநிலையம், துறைமுகம், போதுமான நிலவசதி, தண்ணீர், மின்சாரம், தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதை விளக்கியுள்ளோம். சென்னை போன்ற 'ஏ' பிரிவு மாவட்டங்களை விட மதுரை போன்ற 'சி' பிரிவு மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் முதலீடே பாதியளவு குறைந்துவிடும். அரசும் அதே அளவு சலுகைகள் வழங்கும் என தெரிவித்துள்ளோம்.துாத்துக்குடியில் உள்ள இரண்டு மெகா திட்டங்களுக்கு ரூ.48 ஆயிரம், ரூ.16 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
05-அக்-202223:04:02 IST Report Abuse
M  Ramachandran இஙகு ஒரு வினோத போக்கு. நாடு பொற்காற்றும் தன்னல மற்ற பாரதியாரை துவேசப்படுத்தி பேராசும் சிறு புத்தியுடையவர்கள் உணமையான ஜாதி பாகு படு காட்டாதவர் ஜாதி இரண்டலியா வேறு இல்லைய பாப்பா என்று பாடி அதை தானே வலி நடத்தி காட்டிவரும் அவரே. ஆனால் இப்[ஓடுது சத்துவம் பேராசும் திராவிட கத்தி ஆளும் அமைச்சர்கள் ஜாதி வேறுபாட்டைய கண்கூடாக காட்டி வருகிறார்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
05-அக்-202222:58:32 IST Report Abuse
M  Ramachandran திராவிட குஞ்சுகள் ஆட்சியில் தொழில் முன்னேற்றமே கேள்விக்குறி.ஆனால் கட்சியின் முக்கிய தலைகளின் தொந்தி வளர்ந்திருக்கு. கல்வியில் மோசம் தொழிற்சாலைகள் மூடு விழா. கட்சி தொழிற்சங்கங்ளால் குடையச்சல் கொடுப்பது எதெற்கெடுத்தாலும் கம்மிஷின்.காகித புலி வைக்கோ கன்னி மொழி இவர்கள் மூலம் தூத்துக்குடி தொழிற்சாலையாய் மூடிவதற்கு அயல்நாட்டில் கமிஸ்ஸனுக்காக அது மட்டுமா? போராட்டம் என்ற பெயரில் கூடங்குளம் அணுஆலையாய் திறக்க விடாமல் இருக்க அயல் நாட்டு கமிஷன். அது மத்திய அரசின் கடுமையான நடவடிக்கையால் பருப்பு வேக வில்லய்ய்ய. இது மாதிரி தேச விரோத கும்பல் நாடா மாட்டத்தினால் தமிழகம் பக்கமென தொழில் தொடங்க பயப்படும் நிலைய.நோக்கியா கம்பெனி மூடல் நெய்வேலி தொளிர்ச்சாலையை மூடப்ரம்ம பிரயத்தனம் செய்தார்கள்.முடிய வில்லை. சேலம் 8எட்டு வலி சாலையை வரவிடாமல் செய்து இப்போ ஆளும் கட்சியான வுடன் அதற்கு காவடியெடுத்தல். எதிலும் ஊழல் எஙகும் ஊழல். நாளொரு ஊழல் போழுது தொரு ஊழல்.இந்த லட்சணத்தில் நமக்கு மத்திய அரசு திட்டங்கள் எது கொண்டு வந்தாலும் அதைய எதிர்க்க வேண்டுமென்று வன்மம்.அதே திட்டதைய பணமாக இவர்களுக்கு கொடுத்தால் புன்னகையுடன் வரவேர்ப்பார்கள். பிறகு அதற்கு ஸ்டிக்கேரையும் ஒட்டு வார்கள்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202219:44:02 IST Report Abuse
venugopal s மதுரை கோவையை விட தொழில் வளர்ச்சியில் பின்தங்கியதற்கு முக்கிய காரணம் அடிப்படையிலேயே கோவை மக்கள் தொழில் முனைவோர் மற்றும் சுய தொழில் ஆரம்பிக்க ஆர்வம் உள்ளவர்கள். மதுரை மற்றும் தென் தமிழக மக்கள் அடிப்படையில் அரசு வேலை மற்றும் மாதச் சம்பள வேலைகளில் மட்டுமே ஆர்வம் உடையவர்கள். சுய தொழில் ஆர்வம் உடையவர்கள் வெகு குறைவு.மாநில அரசு தென் தமிழகத்தில் சுய தொழில் முனைவோருக்கு அதிக ஊக்கம் மற்றும் சலுகைகள் வழங்கி தொழில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X