வேல் வாங்குதலில் குளறுபடி: கண்காணிப்பாளர் பக்தர்கள் வாக்குவாதம்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயில் நவராத்திரி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் கண்காணிப்பாளர் பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மலைக்கோயிலில் செப்., 26 காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்கியது. நேற்று உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கு நடந்தது. பின் பழநி ஆதீனம், புலிப்பாணி பாத்திர சுவாமிகளை
Navratri, palani, Malaikovil, பழநி, மலைக்கோயில், நவராத்திரி,  Vel, Devotees,  வேல், பக்தர்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயில் நவராத்திரி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் கண்காணிப்பாளர் பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



மலைக்கோயிலில் செப்., 26 காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்கியது. நேற்று உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கு நடந்தது. பின் பழநி ஆதீனம், புலிப்பாணி பாத்திர சுவாமிகளை முறைப்படி போகர் சன்னதியில் இருந்து மலைக்கோயில் சன்னதிக்கு அழைத்து வர வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கயிருந்த நிலையில், புலிப்பாணி பாத்திர சுவாமிகளை முறைப்படி கோயில் கண்காணிப்பாளர் அழைத்து வர வேண்டும் என பக்தர்கள் கோரினர்.



latest tamil news


கோயில் நிர்வாகம் சார்பில் பேஷ்கார் அழைத்து வருவார் என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹந்து அமைப்பினர், பல ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் நவராத்திரி நிகழ்ச்சியில் இந்தாண்டு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோயில் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். அப்போது கண்காணிப்பாளருக்கும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இணை கமிஷனர் நடராஜன் பேச்சுவார்த்தை நடத்திய பின் டி.எஸ்.பி., சிவசக்தி தலைமையில் போலீசார் உதவியுடன் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
08-அக்-202220:14:22 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இந்த நாடு, மதச்சார்பின்மை கொண்ட நாடு....அப்படியெனில், கோவில்களுக்குள் அரசாங்கம் நுழைவது எதற்காக ? கோவில்களை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும்...
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
05-அக்-202219:22:44 IST Report Abuse
r.sundaram அந்த கண்காணிப்பாளர், நான் பிறப்பால் ஒரு ஹிந்து, தற்போதும் ஹிந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்று சத்திய பிரமாணம் எடுத்து விட்டாரா? அப்படி சத்திய பிரமாணம் எடுக்காத வரையில், அவர் ஹிந்து அறநிலையத்துறையில் வேலைபார்க்க முடியாது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-அக்-202216:16:07 IST Report Abuse
Bhaskaran கண்காணிப்பாளன் போலிருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X