அரசு பள்ளியில் சம்பளத்துக்கு ஆள் வைத்த ஆசிரியை: வேலைக்கு வராமல் ஊதியம் பெற்றது அம்பலம்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (68) | |
Advertisement
சென்னை:அரசு பள்ளிகளில் வேலைக்கு வராமல், சம்பளத்துக்கு ஆள் வைத்து பாடம் நடத்தியதாக, அரசு பள்ளி ஆசிரியைகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் உள்ள ஆலாந்துறை அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றிய, கணித பட்டதாரி ஆசிரியை ஒருவர், ஒன்றரை ஆண்டுகளாக, வாரம் ஒரு முறை வருகைப் பதிவில் கையெழுத்து போட்டு விட்டு, வேலைக்கு வராமலேயே சம்பளம் பெற்று வந்தது
Govt School, Teacher, Coimbatore, அரசு பள்ளி,  ஆசிரியை, கோவை,  Salary, சம்பளம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:அரசு பள்ளிகளில் வேலைக்கு வராமல், சம்பளத்துக்கு ஆள் வைத்து பாடம் நடத்தியதாக, அரசு பள்ளி ஆசிரியைகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் உள்ள ஆலாந்துறை அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றிய, கணித பட்டதாரி ஆசிரியை ஒருவர், ஒன்றரை ஆண்டுகளாக, வாரம் ஒரு முறை வருகைப் பதிவில் கையெழுத்து போட்டு விட்டு, வேலைக்கு வராமலேயே சம்பளம் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.ஒன்றரை ஆண்டுகளாக வேலைக்கு வராத நிலையில், அவரது கணித பாடத்தை மாணவர்களுக்கு நடத்துவதற்காக, தலைமை ஆசிரியையும், சம்பந்தப்பட்ட கணித ஆசிரியையும் சேர்ந்து, தாங்களே ஒரு பட்டதாரி ஆசிரியைக்கு குறைந்த சம்பளம் கொடுத்து, பணிக்கு அமர்த்தி உள்ளனர்.சம்பந்தப்பட்ட கணித ஆசிரியை, வாரம் ஒரு நாள் பள்ளிக்கு வந்து, அனைத்து நாட்களும் பணிக்கு வந்ததாக, அரசின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, வீட்டுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.


இவருக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க, அரசின் கருவூலத்துறைக்கு பச்சை மை கையெழுத்திட்டு, தலைமை ஆசிரியை கடிதம் கொடுத்து வந்துள்ளார்.அதே பள்ளியில், இன்னொரு ஆசிரியை இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கு பணிக்கு வராமல், வருகைப்பதிவில் கையெழுத்திட்டுள்ளார். அவருக்கு பதில் பாடம் நடத்துவதற்கு, தற்காலிக ஆசிரியர் ஒருவரை பணி அமர்த்தி பாடம் நடத்த வைத்துள்ளார்.
latest tamil news


இரண்டு ஆசிரியைகளும் விடுப்பு எடுக்காமலும், துறையின் அனுமதி பெறாமலும், வீட்டில் இருந்தவாறு அரசிடம் சம்பளம் பெற்று உள்ளனர்.தலைமை ஆசிரியையுடன் கூட்டு சேர்ந்து, அரசு பள்ளியை தங்களுக்கு சொந்தமான பள்ளி போல பாவித்து, இஷ்டத்துக்கு வேலைக்கு ஆள் வைத்து, பாடம் நடத்தியுள்ளனர்.இந்த மோசடிக்கு, தலைமை ஆசிரியை தரப்பில், ஆசிரியைகளிடம் தனியாக 'கட்டிங்' வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த விவகாரம் கடந்த வாரம் வெளியில் கசிந்த நிலையில், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியை, தாங்கள் தவறு செய்து விட்டதாக, ஆசிரியர் ஒருவரிடம் உண்மையை ஒப்புக்கொள்ளும் ஆடியோ நகல், சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், அடுத்த கட்ட விசாரணையை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சேகர் - Sirkali,இந்தியா
07-அக்-202205:34:56 IST Report Abuse
சேகர் தனியார் பள்ளியில் கொடுக்கும் சம்பளம் அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும் கொடுத்தால் இது போன்ற சம்பவம் நடக்காது. சம்பளம் வாங்குவதே அதிகம் இதில் பழைய ஓய்வூதியம் வேறு வேண்டுமாம் இவர்கள் தற்போது உட்கார்ந்து கொண்டு வாங்கும் சம்பளம் போதாதாம் கடைசி வரை உட்கார்ந்து கொண்டு பணத்தை 5 பைசா வட்டிக்கு விட்டு கோடீஸ்வரன் ஆகவேண்டும் மற்றவர்கள் வேலையின்றி கஷ்ட படவேண்டும்
Rate this:
Cancel
Sudha - Tirupur,இந்தியா
06-அக்-202208:31:04 IST Report Abuse
Sudha Kalviya avamathikiravangaluku aasiriyar paniyayai avamathikiravangaluku thukku thandanai tharanum.
Rate this:
Cancel
Ravi - Tamilnadu,இந்தியா
06-அக்-202207:51:46 IST Report Abuse
Ravi இவர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு சலுகை அளிக்க வேண்டும். இன்னும் இது போல மாற்றம் காணலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X