எல்லாத்துலயும் ஓரளவுக்கு உண்மைகள் இருக்கு என்பதை மறுக்க முடியாது!

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் பேட்டி: தி.முக., ஆட்சிக்கு வந்த பின், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உளவுத் துறை உறங்கி நீண்ட நாட்களாகி விட்டது. ஊழலில் புரையோடி உள்ள தி.மு.க., அரசு, சாராய தர்பாராக, பெண்களுக்கு துரோகம் இழைக்கும் அரசாக, பயங்கரவாத செயல்களும், போதை பொருள் அதிகரிப்பும் உள்ள அரசாக உள்ளது.எதிர்க்கட்சி என்பதற்காக, நீங்க கொஞ்சம்
ibrahim, anbumani, semmalai, இப்ராஹிம், அன்புமணி, செம்மலை


பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் பேட்டி:

தி.முக., ஆட்சிக்கு வந்த பின், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உளவுத் துறை உறங்கி நீண்ட நாட்களாகி விட்டது. ஊழலில் புரையோடி உள்ள தி.மு.க., அரசு, சாராய தர்பாராக, பெண்களுக்கு துரோகம் இழைக்கும் அரசாக, பயங்கரவாத செயல்களும், போதை பொருள் அதிகரிப்பும் உள்ள அரசாக உள்ளது.

எதிர்க்கட்சி என்பதற்காக, நீங்க கொஞ்சம் ஓவராகவே குற்றஞ்சாட்டினாலும், எல்லாத்துலயும் ஓரளவுக்கு உண்மைகள் இருக்கு என்பதை மறுக்க முடியாது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க, அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

அவங்களுக்கு வேலை குடுத்துட்டா, தற்காலிக ஆசிரியர் நியமனங்களை செய்ய முடியாதே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:

கடந்த மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 1.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்ற, மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பானது, வரி வசூலில் சாதனையாக பார்க்கப்படுகிறது. அதிக இனங்களை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவதும், வரி சதவீதத்தை உயர்த்துவதுமான போக்கிற்கு மாறாக, நேர்முக வரி விதிப்பில், அதிகமான வரி செலுத்துவோரை கொண்டு வருவதன் வாயிலாக, வரி வருவாயை பெருக்க முடியும்.


latest tamil newsஅரசியல் கருத்துகளை் சொல்லி, யாரும் கண்டுக்காம போயிட்டதால, பொருளாதாரம் பக்கம் வண்டியை திருப்பிட்டீங்களோ?
தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் பேச்சு:

அரசியலில் தகுதியுள்ள கட்சி பா.ஜ., மட்டுமே. இக்கட்சியில் ஊழல் கிடையாது; வாரிசு அரசியல் கிடையாது. தமிழகத்தில் எதிர்ப்புகளை தாண்டி, பா.ஜ., வளர்ச்சி பெற்று வருகிறது. இக்கட்சியை வலுவான இயக்கமாக மாற்ற பாடுபட்டால், தமிழகத்தை 2026ல் பா.ஜ., தான் ஆட்சி புரியும்.

உங்க கனவு பலிக்க வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும்... அதற்கு உங்க கட்சியினர் தயாராக இருக்காங்களா?
மக்கள் நீதி மய்யம் அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள், கிராம சபை கூட்டங்கள் வாயிலாக தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. கிராம சபையின் வலிமையை மக்கள் புரிந்து கொண்டது போல, மத்திய - மாநில அரசுகளும் உணர்ந்து, அவர்களது கோரிக்கையை ஏற்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்னாடி, ஊர் ஊராக போய் கிராம சபை கூட்டங்கள் நடத்திய முதல்வர் தான் இதில் முடிவெடுக்கணும்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
05-அக்-202218:14:07 IST Report Abuse
DVRR டாஸ்மாக்கினாட்டில் மக்கள் மடையர்கள் அறிவிலிகள் என்ற போக்கில் இந்த திருட்டு திராவிட மடியல் அரசு செயல்கள் ஒவ்வொன்றும் சொல்கின்றது. உதாரணம் - 8 வழிச்சாலை, ரயில் நிலையம், ரயில் வழிப்பாதை, விமான நிலையம். இப்படி பலருக்கு பயன் தரும் விஷயம் நடை பெறவேண்டுமானால் முதலில் மக்கள் யோசித்து அதற்கு உடன்படவேண்டும் அதில் உள்ள தீமைகள் கருத்தும் நன்மைகள் குறித்தும் ஆட்சியில் இருக்கும் கட்சியும் எதிர் கட்சிகளும் ஒரு ஆய்வு அறிக்கை தயார் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் தவறு தப்பு தீமை என்னும் CNQ - Compulsive Negation Quotient - என்னும் எதிர்ப்பு உணர்ச்சி ஒழிக்கப்படவேண்டும். ஒரு சிறிய உதாரணம். மனிதர்கள் உணவு உண்கின்றார்களே - அதன் கழிவு நீர் குடிக்கின்றார்களே அதன் கழிவு சுவாசம் செய்கின்றார்களே - அதன் கழிவு. அப்படியென்றால் யாரும் உணவு உண்ணக்கூடாது நீர் அருந்தக்கூடாது சுவாசிக்கக்கூடாது என்று வைத்துகொள்ளலாமா. டாஸ்மாக்கினாடு அறிவிலிகள் 72%குடிகார்களாம் இது ஆய்வு அறிக்கை சொல்கின்றது. ஆகவே தான் இவ்வளவு கேவலாமா மனநிலையில் இருக்கின்றார்கள் அவர்கள். மனிதர்களே திருந்துங்கள், நாட்டுக்கு நல்வழி காட்டுங்கள். வெறும் அரசியல்வாதியை நடிக கூட்டத்தை நம்பாதீர்கள்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
05-அக்-202217:26:24 IST Report Abuse
r ravichandran இப்படி நமது முன்னோர்கள் விவசாய நிலம் பாதிக்க படும் என்று நினைத்து இருந்தால், சென்னை, மதுரை, திருச்சி, கோவை இரயில் நிலையம், இரயில் பாதைகள், விமான நிலையங்கள், மாநில மத்திய நெடுஞ்சாலைகள், நெய்வேலி மின் உற்பத்தி நிலையம், இன்னும் பல ஒரு காலத்தில் பயிர் செய்யும் நிலங்களாக தான் இருந்து இருக்கும்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
05-அக்-202216:26:58 IST Report Abuse
Sampath Kumar எல்லாத்திலும் ஓரளவிற்கு உண்மை இருக்கு அப்புறம் பொய்யும் இருக்கு இரண்டும் கலந்துதான் ஏங்கேயும் ஏப்போதும் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X