வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் மூளு, மற்றும் டிராச் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
நேற்று இரவு முதல் நடந்த என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பையும், மற்றொருவன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது.

டிராச் பகுதியில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் இருவரது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹனான் பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட்