பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைத்தார்.விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். வேல்முருகன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் வரவேற்றார்.புதிய சுகாதார நிலையத்தை அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைத்தார். அமைச்சர் கணேசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.விழாவில் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் மீரா, ஆர்.டி.ஒ., அதியமான்கவியரசு, தாசில்தார் வெற்றிவேல், வட்டார மருத்துவர் தனசேகரன், நகராட்சி கமிஷ்னர் மகேஸ்வரி, துணை சேர்மன் சிவா, நகர தி.மு.க. பொருளாளர் ராமலிங்கம், அவை தலைவர் ராஜா, மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்தி, தணிகைசெல்வம், ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், கவுன்சிலர்கள் ரமேஷ், கிருஷ்ணராஜ், சண்முகவள்ளி, கவுரிஅன்பழகன், சோழன், எக்ஸ்னோரா தலைவர் பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.