மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பந்த்ரா - வோர்லி பகுதியில் அதிவேகமாக கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
அதிகாலை நேரத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகிய நிலையில் அங்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சில வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெறும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.