18 மாநிலத்தில் 105 இடங்களில் ரெய்டு: சைபர் குற்றத்தை தடுக்க வெளிநாட்டு போலீசுடன் இணைந்து சிபிஐ அதிரடி

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க 'ஆப்ரேஷன் சக்ரா' என்ற பெயரில் 18 மாநிலங்களில் 105 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. போலி கால்சென்டர் மூலமாக இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு
CBI, Operation Chakra, Cyber Criminals, சிபிஐ, ஆப்ரேஷன் சக்ரா, சைபர் குற்றங்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க 'ஆப்ரேஷன் சக்ரா' என்ற பெயரில் 18 மாநிலங்களில் 105 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. போலி கால்சென்டர் மூலமாக இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.



இந்நிலையில், சைபர் குற்றங்கள் தொடர்பாக 'ஆப்ரேஷன் சக்ரா' என்ற பெயரில் சிபிஐ நேற்று (அக்.,4) முதல் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் தலைமையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலிய போலீசார் இணைந்து 18 மாநிலங்களில் 105 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.



latest tamil news


இதுவரை 87 இடங்களில் சோதனை நிறைவுப் பெற்றதாகவும், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4 இடங்களும், டில்லியில் 5 இடங்களும், சண்டிகரில் 3 இடங்களும், பஞ்சாப், கர்நாடகா, அசாம் மாவட்டங்களில் தலா 2 இடங்களும் என இன்னும் 18 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ராஜஸ்தானில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202221:35:17 IST Report Abuse
அப்புசாமி போச்சா... போச்சா... இருக்கிற கால்செண்டர் வேலையும் போச்சா? எல்லிரும் LIC ஏஜெண்ட்டா மாறிடுங்க.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
05-அக்-202216:26:02 IST Report Abuse
Tamilan ,,,,
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-அக்-202213:54:59 IST Report Abuse
சீனி ஸ்சேட்பெங்கல இர்ந்து கால் பண்றோம், உங்க ஏடிம் நெம்பர் சொல்ங்கோன்னு, ஒருத்தன் ஊர்ல் இருக்கானே அவனை சிபிஐ, என்ன அமெரிக்க எப்.பி.ஐ கூட கண்டுபிடிக்க முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X