திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (188) | |
Advertisement
சென்னை: 'மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் இது ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்கிறார்கள். ஆனால் திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல' என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னையில் அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் இது ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்கிறார்கள்.
DMK, Stalin, MKStalin, Vallalar200, Vallalar, Tamilnadu CM, திமுக, ஸ்டாலின், முதல்வர், வள்ளலார், ஆன்மிகம், வள்ளலார் 200

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் இது ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்கிறார்கள். ஆனால் திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல' என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.



சென்னையில் அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் இது ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்கிறார்கள். ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக. எனது பேச்சின் முன் பகுதி, பின் பகுதியை வெட்டி, ஒட்டி, திரித்து அவதூறு கிளப்பவும் வாய்ப்புள்ளது.



ஆன்மிகத்தை, அரசியல், சுயநலம், உயர்வு, தாழ்வு கற்பிக்க மட்டுமே பயன்படுத்துவதற்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து செயல்படுபவர்கள் இதனை நன்கு உணர்வார்கள்.



latest tamil news


கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு அதிகம் செல்பவர் தான் அமைச்சர் சேகர்பாபு. அறப்பணிகள் எல்லாம் முறையாக நடக்கிறதா என்பதை பார்ப்பதற்காக தான் சேகர்பாபு அதிக நேரம் செலவிடுகிறார். ஒரு நளைக்கு மூன்று ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் சென்றுவருவார்.



திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (188)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
06-அக்-202216:45:16 IST Report Abuse
Narayanan ஸ்டாலின் அவர்களே நாங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம் . உங்களின் ஆட்சியில் ஹிந்து மக்கள் எப்படி துன்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியாமல் ஆட்சி நடக்கிறது .
Rate this:
Cancel
06-அக்-202208:44:23 IST Report Abuse
Krishna Moorthy இனியும் இதை நம்ப தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என நிரூபிப்பார்கள் என நம்புவோம்.
Rate this:
Cancel
Hosurian -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202208:08:20 IST Report Abuse
Hosurian "நீரில்லா நெற்றி பாழ்" என்ற கொள்கையுடைய வள்ளாலார் நெற்றியில் இருந்த திருநீரை எடுத்துவிட்டீர்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X