தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை கொட்டலாம்!

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | |
Advertisement
சென்னை : மத்திய மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், இன்று(அக்.,05) முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நீலகிரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : மத்திய மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், இன்று(அக்.,05) முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.




latest tamil news



இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நீலகிரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



latest tamil news



நாளை.,(அக்., 06) : மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகப்பட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.



மீனவர்களுக்கான எச்சரிக்கை:



latest tamil news



குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்பகுதிகளுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X