கோயம்புத்துாரில் மூதாட்டி ஒருவர் உள்ளிட்ட சில பெண்கள் அரசு டவுன் பஸ்சில், 'ஓசி பயணம் வேண்டாம்; டிக்கெட் கொடு' என கண்டக்டரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட 'வீடியோ' வைரலானது.இந்நிலையில் இலவசமாக பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம், பணம் வாங்கிக் டிக்கெட் கொடுக்கலாம் என அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:அரசு டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் திட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை.இலவசமாக பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கி டிக்கெட் கொடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தி வதந்தி, என்றார்.