சின்ன சின்ன ஆசை.. பிரதமராக ஆசை..; தேசிய கட்சியாக பெயர் மாற்றிய சந்திரசேகர் ராவ்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
ஐதராபாத்: லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் போட்டியிடும் நோக்கில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினை 'பாரதிய ரஷ்ட்ரீய சமிதி' எனப் பெயர் மாற்றினார் அக்கட்சியின் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ்.2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் மாறிமாறி முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா
TRS, BRS, Chandrasekhar Rao, KC Rao, Telangana, Telangana Rashtra Samithi, Renamed, Bharat Rashtra Samithi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஐதராபாத்: லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் போட்டியிடும் நோக்கில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினை 'பாரதிய ரஷ்ட்ரீய சமிதி' எனப் பெயர் மாற்றினார் அக்கட்சியின் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் மாறிமாறி முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சியினரை அவ்வபோது சந்தித்து தனக்கான ஆதரவை கோரி வருகிறார். லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரதமராக போட்டியிட சந்திரசேகர்ராவுக்கும் ஆசை வந்துள்ளது.



latest tamil news


இதன் வெளிப்பாடாக, பா.ஜ.,வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ள சந்திர சேகர ராவ், இன்று (அக்.,5) தசராவையொட்டி தனது கட்சி பெயரை 'பாரதிய ரஷ்ட்ரீய சமிதி' என மாற்றியுள்ளார். ஐதராபாத்தில் இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தமிழகத்தை சேர்ந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல மாநிலத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202210:25:55 IST Report Abuse
எவர்கிங் டெல்லி அளவில் காங்கிரஸ் இல்லாத குறையை போக்க இந்த புதுக்கட்சி....தெலுங்கானாவை கெடுத்தது பத்தாது.... இனி தேசீய அளவில் கெடுக்க கிளம்பிட்டானுக....
Rate this:
Cancel
Raja Sekar -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202206:47:24 IST Report Abuse
Raja Sekar 0 …..
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
06-அக்-202200:08:11 IST Report Abuse
Aarkay உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா கதைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X