‛‛திருமாவளவன், சீமான் தேச துரோகிகள்'': ஹெச்.ராஜா தாக்கு

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
மதுரை: திருமாவளவன், சீமான் இருவரும் தேச துரோகிகள்.முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என பா.ஜ., மூத்த தலைவர் ஹெ.ச் ராஜா கூறினார்.இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் அக்.11-ல் திருமாவளவன் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. மனித சங்கிலிக்கு அனுமதி
 H Raja, BJP, Thirumavalavan, ஹெச் ராஜா, பாஜ, திருமாவளவன், சீமான், தேசதுரோகிகள், Seeman,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: திருமாவளவன், சீமான் இருவரும் தேச துரோகிகள்.முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என பா.ஜ., மூத்த தலைவர் ஹெ.ச் ராஜா கூறினார்.


இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் அக்.11-ல் திருமாவளவன் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால் 1991-ல் நடந்தது இப்போதும் நடைபெறும்.


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால், 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தேச துரோகிகள்:


நாடு முழுவதும் பிஎப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவதும், செயல்படுவதும் சட்டப்படி குற்றமாகும். திருமாவளவன்,சீமான் இருவரும் தேச துரோகிகள். இதனால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் ஸ்டாலினுடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள்.



ஆர்எஸ்எஸ் ஊர்வலம்:


புதுச்சேரியில் அக்.2-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும் போலீசார் அனுமதி மறுத்தனர். தமிழகத்தில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது.


அதனால்தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் இந்திய விரோத, தமிழ் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்.



latest tamil news



தமிழக டிஜிபி, பிஎப்ஐ-க்கு ஆதரவாகவும், திருமாவளவனுக்கு சாதகமாகவும் பேசியது துரதிர்ஷடவசமானது. காவல் துறைக்கு தலைவராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தகுதி இல்லை. டி.ஜி.பி-க்கு சைக்கிளில் செல்லவே நேரம் சரியாக உள்ளது.



கருத்து திருடர்கள்:


காலை உணவு திட்டம், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டம். இத்திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக கருத்து திருடர்கள் திமுக கூறுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு சுயமாக சிந்திக்க தெரியாது.



ராஜராஜ சோழன் ஹிந்து மதம் தான்:


ராஜராஜ சோழன் எங்கே மசூதி,சர்ச் கட்டினார் என வெற்றி மாறன் விளக்க வேண்டும். ராஜராஜ சோழன் நூறு சதவீத ஹிந்து மதம்தான். இந்தியாவின் பிறந்த அனைத்து மதங்களும் ஹிந்து மதம் தான்.


சிவம், சைவம், வைணவம் என்பது வேறு வேறல்ல. அனைத்தும் ஹிந்து மதம்தான். மேலும் அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் ஹிந்து தான். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202210:20:44 IST Report Abuse
எவர்கிங் அப்படியே, இதை கண்டும் கேட்டும் மூடிக்கிட்டு இருக்கும் கோழைகள் என்றும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே ?!
Rate this:
RAAJAA - ,
06-அக்-202214:10:01 IST Report Abuse
RAAJAA .தமிழகத்துக்கும் மத்திய அரசுக்கும் எதுவுமே சம்பந்தமே இல்லை என்பது போல் நடந்து கொள்கிறார்கள்....பார்ப்பனர்களுக்கு காவல்காரனாக மோடியும் அமித்ஷாவும் செயல்படுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார் இதையெல்லாம் அவர்கள் காதில் போய் சேரவில்லையா? மோடியை இழிவாக திட்டுகிறார்கள் எதையுமே கண்டு கொள்ளவில்லை....
Rate this:
Cancel
RAAJAA -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202209:11:50 IST Report Abuse
RAAJAA உங்க ஆட்சிதானே உள்ளது மத்தியில்.. இந்த தேச துராேகிகளை கைது செய்ய அமித்ஷாவுக்கு ஏன் தைரியம் இல்லை? இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி விட்டு வைக்க மாட்டார்.
Rate this:
06-அக்-202210:21:35 IST Report Abuse
எவர்கிங்சபாஷ் சரியான கருத்து...
Rate this:
Cancel
BalaMurugan -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202206:34:06 IST Report Abuse
BalaMurugan ……
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X