கள்ளச்சாராய சோதனை: 14 ஆயிரம் லிட்டர் ஊறல் பறிமுதல்; 38 பேர் கைது!

Added : அக் 05, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
வேலுார்: வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாய சோதனையில் 14 ஆயிரம் லிட்டர் ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு 38 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், தமிழக- ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கொரிப்பள்ளம், தேவராஜபுரம் ஆகிய மலைப்பகுதிகளில் கள்ள சாராயம் தடுப்பு சோதனை இன்று(அக்.,05) நடந்தது. இதில், 38 வழக்குகள் பதிவு
கள்ளசாராயம், வேலூர், திருப்பத்தூர், Liquor, Vellore, Tirupattur,

வேலுார்: வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாய சோதனையில் 14 ஆயிரம் லிட்டர் ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு 38 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், தமிழக- ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கொரிப்பள்ளம், தேவராஜபுரம் ஆகிய மலைப்பகுதிகளில் கள்ள சாராயம் தடுப்பு சோதனை இன்று(அக்.,05) நடந்தது.


இதில், 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டனர். 228 வெளிமாநில மதுபானம், 27 லிட்டர் உள்நாட்டு மதுபானம், 513 லிட்டர் கள்ள சாராயம், 8,800 லிட்டர் கள்ள சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், 10 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.


வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் தலைமையிலான போலீசார் அல்லேரி, பெரிய மாமரத்துகொல்லை, சின்ன மாமரத்து கொல்லை, குணம்பட்டி ஆகிய மலைப்பகுதிகளில் கள்ள சாராய தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.


இதில் 5,200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. கள்ள சாராயம் காய்சியதற்காக எலந்தபூரை சேர்ந்த ராமலிங்கம், 33, ஏரியூர், தேவராஜ், 28, உள்ளிட்ட 10 பேர் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-அக்-202206:21:13 IST Report Abuse
Mani . V ஏப்பா, மாமூலை ஒழுங்காக கொடுக்கவில்லையா? (கள்ள சாராயத்தை ஒழிக்கத்தான் அரசே டாஸ்மாக்கை நடத்துகிறது)
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
05-அக்-202222:40:26 IST Report Abuse
S.kausalya என்னவோ மது விலக்கு அமுல் படுத்தினால் கள்ள சாராயம் உபயோகிக்க ஆரம்பிப்பார்கள் என்று இந்த திராவிட அறிவாளிகள் சொல்வார்களே. இப்போது என்ன சொல்ல போகிறார்கள். அதாவது டாஸ்மாக் விற்பனை யால், கட்சியின் மேல் மட்ட சாராய ஆலை அதிபர்களுக்கு பணம் சேரும். அடுத்த கட்ட தலைமை பணம் பார்க்க வேண்டாமா? அது தான் இந்த கள்ள சாராய.விற்பனை.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
05-அக்-202222:38:09 IST Report Abuse
Anantharaman Srinivasan புதிதாக ஆரம்பித்த குழுவா அல்லது 16 மாதங்களாக மாட்டிக்கொள்ளாமல் மாமூல் வெட்டி தப்பிக்கொண்டு வந்த கும்பலா ? வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில்.. வேல்முருகனின் ஆசியுடன் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X