வேலுார்: வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாய சோதனையில் 14 ஆயிரம் லிட்டர் ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், தமிழக- ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கொரிப்பள்ளம், தேவராஜபுரம் ஆகிய மலைப்பகுதிகளில் கள்ள சாராயம் தடுப்பு சோதனை இன்று(அக்.,05) நடந்தது.
இதில், 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டனர். 228 வெளிமாநில மதுபானம், 27 லிட்டர் உள்நாட்டு மதுபானம், 513 லிட்டர் கள்ள சாராயம், 8,800 லிட்டர் கள்ள சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், 10 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் தலைமையிலான போலீசார் அல்லேரி, பெரிய மாமரத்துகொல்லை, சின்ன மாமரத்து கொல்லை, குணம்பட்டி ஆகிய மலைப்பகுதிகளில் கள்ள சாராய தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 5,200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. கள்ள சாராயம் காய்சியதற்காக எலந்தபூரை சேர்ந்த ராமலிங்கம், 33, ஏரியூர், தேவராஜ், 28, உள்ளிட்ட 10 பேர் போலீசார் கைது செய்தனர்.