அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை| Dinamalar

அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை

Added : அக் 05, 2022 | |
கடலுார் மற்றும் அண்டை மாவட்டங்களில் புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்க பிரத்யேகமான மருத்துவமனை அரசு மற்றும் தனியார் துறையில் இல்லாதது மக்களுக்கு குறையாக இருந்தது.குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை மற்றும் பெருநகரங்களில் புற்று நோய்க்கான சிகிச்சை பெற இயலாமையால் நோய் முற்றி அவதியும், மரணமும் ஏற்படுகிறது. இதனை போக்கும் வகையில் கிருஷ்ணா
அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை

கடலுார் மற்றும் அண்டை மாவட்டங்களில் புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்க பிரத்யேகமான மருத்துவமனை அரசு மற்றும் தனியார் துறையில் இல்லாதது மக்களுக்கு குறையாக இருந்தது.

குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை மற்றும் பெருநகரங்களில் புற்று நோய்க்கான சிகிச்சை பெற இயலாமையால் நோய் முற்றி அவதியும், மரணமும் ஏற்படுகிறது. இதனை போக்கும் வகையில் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி சிறப்பாக செயல்படுகிறது. இங்கு, 6,500 பேர் பயனடைந்துள்ளனர். புற்றுநோய்க்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகளின் விலை மிக அதிகம்.



இம்மருத்துவமனையில் மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் சிறப்பாக செய்யப்படுகிறது.புற்றுநோயை குணப்படுத்துவதில் கதிரியக்க சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு, நிறுவப்பட்டுள்ள 'எலக்டா சைனர்ஜி மல்டி எனர்ஜி லைனர் ஆக்சிலேட்டர்' என்ற இயந்திரம் சிறப்பாகவும், துல்லியமாகவும் புற்றுநோயுள்ள பகுதியை மட்டும் அழிக்கக் கூடிய திறன் வாய்ந்தது.



நியூக்ளியர் மெடிசன் மூலமாக நோயுற்ற உறுப்புகளில் திசுக்களின் தன்மையை ஆய்வு செய்து, அதன் செயல் திறனை காண்பதன் மூலமாக பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அளவிட முடியும். குறிப்பாக, இருதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லிரல் போன்ற உறுப்புகளில் நோயின் தன்மையை இதன் மூலமாக கணிக்கலாம். இந்தாண்டு 'காமா கேமரா ஸ்கேனர்' சேவை துவங்கப்பட உள்ளது. புற்றுநோய் பூரணமாக குணமடைய தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாக கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை உள்ளது.



இங்கு அக்., 1ம் தேதி முதல், 31ம் தேதி வரை 2,000 ரூபாய்க்கு செய்யப்படும் மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோகிராம் எக்ஸ்ரே பரிசோதனை குறைந்த கட்டணத்தில் 500 ரூபாய்க்கு செய்யப்படுகிறது.இதில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பயனடையுமாறு கிருஷ்ணா மருத்துவமனைகளின் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X