நிதிஷ் கட்சியை வழிநடத்த அழைப்பு: பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், தன்னுடைய கட்சியை வழிநடத்தும்படி கேட்டதாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பீஹார் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர், கடந்த 2018-ல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அடுத்த சிறிது நாட்களிலேயே கட்சியின் தேசிய துணைத் தலைவர்
Bihar, Prashant Kishor, Nitish Kumar, CM, Asked, Lead Party, No, பீஹார், பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமார், கட்சி, வழிநடத்துதல், அழைப்பு, மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், தன்னுடைய கட்சியை வழிநடத்தும்படி கேட்டதாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பீஹார் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.



தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர், கடந்த 2018-ல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அடுத்த சிறிது நாட்களிலேயே கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவியும் பிரசாந்த் வசம் வந்தது. அதன்பின்னர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட சில கருத்துவேறுபாடால் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார்.



இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அவர் அரசியல் ஆலோசனை வழங்கினார். இந்த நிலையில் பீஹாரில் கடந்த அக்.,2 முதல் 3500 கி.மீ தூரத்திற்கு 'ஜன் சுராஜ்' என்ற விழிப்புணர்வு பிரச்சார நடைப்பயணம் செய்து வருகிறார்.



நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நிதிஷ் குமார் என்னை அழைத்து உதவி கேட்டார். இதனையடுத்து 2015 சட்டசபைத் தேர்தலில் 'மகாத்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற அவருக்கு நான் உதவினேன். இன்று, எனக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு அவருக்கு மன உறுதி உள்ளது. நாடு முழுவதும் எனது திறமையை நிரூபித்த பிறகு இப்போது எனது சொந்த மாநிலத்தில் வேலை செய்ய முயற்சிக்கிறேன்.



latest tamil news


10 - 15 நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்தார் என்பது ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் தெரியும். அப்போது அவர் தனது கட்சியை வழிநடத்தும்படி என்னிடம் கேட்டார். ஆனால், அது சாத்தியமில்லை என்று நான் கூறிவிட்டேன். ஏனெனில், 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கிராமங்களில் உள்ளவர்களை சந்திப்பேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தேன். எனவே, எந்தப் பதவிக்காகவும் நான் செய்த உறுதிப்பாட்டை என்னால் திரும்பப் பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
japaankaaran - Tokyo,ஜப்பான்
06-அக்-202204:23:25 IST Report Abuse
japaankaaran இந்தியாவில் எந்த மாநிலத்திலயும் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று மேலே உள்ளவர்கள் முடிவு செய்து இருக்கிறார்களோ. சமீப காலமாக ஐந்து ஆண்டுகள் உள்ளுக்குள் கட்டணி மாறினாலும் ஆட்சிகள் கவிழ்ந்தாலும் தேர்தல் நடக்கவில்லை (கட்சி மாறிய தொகுதிகளுக்கு மட்டும் நடக்கிறதே தவிர முழு மாநிலத்துக்கு நடக்கவில்லை). அதோடு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த மாநிலத்தில் பத்து ஆண்டுகள் ஆட்சியும் மாறுவது இல்லை . சமீபத்திய டுரண்ட் இவ்வாறு இருக்கிறது. அப்போ திராவிட மாடல் இன்னும் எட்டு வருஷத்துக்கா
Rate this:
Cancel
05-அக்-202221:31:48 IST Report Abuse
Radhakrishnan ஆமாம், விரைவில் நிதிஷ் குமார் பிரதமர் ஆகி விடுவார். அப்போது கட்சியை வழி நடத்த கட்டாயம் ஒருவர் தேவை 😂
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05-அக்-202221:16:18 IST Report Abuse
Ramesh Sargam இவர் ஏற்கனவே ஒரு கட்சியை வழி நடத்தினார். அந்த கட்சி இப்ப என்னவாயிற்று என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்ப இந்த கட்சியின் நிலைமையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X