தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு அலர்ஜி:தமிழிசை சவுந்தரராஜன்

Added : அக் 05, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
காரைக்கால்: 'தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது' என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.காரைக்காலில் உள்ள ஒருங்கிணந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1 மற்றும் 2 ஆகிய நீதிமன்றங்கள் திறப்பு விழா இன்று (அக்.,5) நடைபெற்றது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர்
Puducherry, Governor, Tamilisai Soundararajan, Manu, புதுச்சேரி, கவர்னர், தமிழிசை சவுந்தரராஜன், மனு, அலர்ஜி, தமிழகம், தமிழ்நாடு

காரைக்கால்: 'தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது' என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.



காரைக்காலில் உள்ள ஒருங்கிணந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1 மற்றும் 2 ஆகிய நீதிமன்றங்கள் திறப்பு விழா இன்று (அக்.,5) நடைபெற்றது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தமிழிசை பேசியதாவது: உலகத்தில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் பெருமை கொள்ள வேண்டும். நடுநிலை தவறாத தராசைப் போல நீதித்துறை இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் அன்றே சொல்லியிருக்கிறார்.



latest tamil news


இன்று உலகம் முழுவதும் நீதித்துறைக்கு இருக்கும் சின்னம் துலாக்கோல்தான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீதி வழுவாமல் இருக்கும் துலாக்கோல்போல் நீதித்துறை இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டி இருக்கிறார் என்பது சிறப்பு. மனு நீதி சோழனை போல் நீதி வழங்கிய மன்னர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனைகள் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
06-அக்-202206:52:09 IST Report Abuse
மணி பதவியின் மான்பை குழைக்கும்விதமாக அரசியல் பேசுவதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் அரசியல் செய்யவேண்டுமானால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக அரசியல் செய்யவேண்டும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-அக்-202206:33:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மனு அலர்ஜி நல்லது. உங்கள் தன்மானம், பகுத்தறிவு இவையிரண்டும் பலம் பெறும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-அக்-202205:59:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் …….
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X