விடுமுறை தினத்தில் செயல்பட்ட மணல் குவாரி :லாரிகள் சிறைபிடிப்பால் பரபரப்பு

Added : அக் 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசு விடுமுறை தினத்தில் மணல் குவாரி செயல்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதிரி வேளூர், பாலூரன் படுகை ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் இருந்து எடுக்கப்படும்
விடுமுறை தினத்தில் செயல்பட்ட மணல் குவாரி :லாரிகள் சிறைபிடிப்பால் பரபரப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசு விடுமுறை தினத்தில் மணல் குவாரி செயல்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதிரி வேளூர், பாலூரன் படுகை ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் இருந்து எடுக்கப்படும் மணல் குன்னம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள யார்டில் சேமித்து வைக்கப்பட்டு ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.


இந்த மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமான மணல் எடுக்கப்படுவதுடன், பர்மிட் பெறப்பட்ட லாரிகளுக்கு மட்டுமின்றி, பர்மிட் பெறாத லாரிகளுக்கும் இரு மடங்கு கூடுதல் தொகைக்கு மணல் விற்பனை செய்யப்படுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில் விஜயதசமி அரசு விடுமுறை தினமான இன்று மணல் குவாரி செயல்பட்டது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றி சொல்லப்பட்டதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து புத்தூர் மதுகடி என்ற இடத்தில் நாம் தமிழர் கட்சியினர் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது அவர்கள் விஜயதசமி அரசு விடுமுறை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தலை மீதி செயல்பட்ட மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சீர்காழி மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05-அக்-202222:56:57 IST Report Abuse
Ramesh Sargam மணல் குவாரி திருடர்களுக்கு விடுமுறை நாள் என்று ஏதாவது உண்டா? வருடம் 365 நாட்களும், வாரத்தின் 7 நாட்களும், வொவொரு நாளிலும் 24 மணிநேரமும் அவர்கள் எண்ணமே எப்படி திருடுவது என்றுதான்.
Rate this:
Cancel
05-அக்-202220:24:28 IST Report Abuse
அநாமதேயம் என்ன வசூல் வேட்டை தான் இந்த விசிக ஆட்கள் பணம் கைமாறியதும் போராட்டம் முடிவுக்கு வந்ததா என்ற செய்தியை போடவில்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X