இதே நாளில் அன்று

Added : அக் 05, 2022 | |
Advertisement
-அக்டோபர் 6, 1893 இன்றைய வங்கதேச நாட்டின் சியோரடலி நகரில், சகன்னாத் சாஹா என்ற மளிகை வியாபாரிக்கு மகனாக, 1893ல் இதே நாளில் பிறந்தவர் மேகநாத் சாஹா. வறுமையில் இருந்த இவரை, பள்ளி ஆசிரியர்கள் படிக்க வைத்தனர்.தன் 12வது வயதில், ஒன்றுபட்ட இந்தியாவில், வங்கப் பிரிவினையை எதிர்த்து, கவர்னர் வருகையின் போது வகுப்பை புறக்கணித்தார்; இதனால், பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். பின்,
இதே நாளில் அன்று


-அக்டோபர் 6, 1893




இன்றைய வங்கதேச நாட்டின் சியோரடலி நகரில், சகன்னாத் சாஹா என்ற மளிகை வியாபாரிக்கு மகனாக, 1893ல் இதே நாளில் பிறந்தவர் மேகநாத் சாஹா. வறுமையில் இருந்த இவரை, பள்ளி ஆசிரியர்கள் படிக்க வைத்தனர்.தன் 12வது வயதில், ஒன்றுபட்ட இந்தியாவில், வங்கப் பிரிவினையை எதிர்த்து, கவர்னர் வருகையின் போது வகுப்பை புறக்கணித்தார்; இதனால், பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். பின், வேறு பள்ளியில் சேர்ந்து முதல் மாணவனாக தேறி, உதவித்தொகை பெற்றார்.கோல்கட்டா மாநில கல்லுாரியில் இயற்பியல் படித்து, பல்கலையில் இரண்டாமிடத்தில் தேறினார்.



ஐ.எப்.எஸ்.,சில் சேர விண்ணப்பித்தார். சுபாஸ் சந்திரபோஸ், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோருடன் தொடர்பில் இருந்ததால் நிராகரிக்கப்பட்டார்.இதனால், வானியல் ஆய்வில் ஈடுபட்டார். சிக்கலான வினாக்களுக்கு விடை கண்டார். சூரியன், விண்மீன்களின் வெப்பநிலை, அழுத்தத்தை கண்டறியும் முறையையும், அங்கு அதிகளவு ஹைட்ரஜன் உள்ளதையும் விளக்கினார்.


இவர், தன் அயனியாக்க சமன்பாடுக்காக, ராயல் சங்கத்தின் உறுப்பினராக்கப்பட்டார். நாட்டின் முக்கிய அணைகள் கட்டும் முன், கள ஆய்வு முடிவுகளை தந்தார். இவர், 1956 பிப்ரவரி 16ல், தன், 62வது வயதில் மறைந்தார்.நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியரின் பிறந்த தினம் இன்று!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X