அம்பானி குடும்பத்துக்கு மீண்டும் கொலை மிரட்டல்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை :தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர்.முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தாரை கொலை செய்யப் போவதாக,
அம்பானி , குடும்பம் ,  கொலை மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை :தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.



'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தாரை கொலை செய்யப் போவதாக, கடந்த ஆக., 15ல் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, மும்பையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சர் எச்.என்., ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் நேற்று அழைத்து ஒருவர், அந்த மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீட்டா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டிஉள்ளார்.



அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வந்த இந்த அழைப்பு குறித்து, மும்பை போலீசார் விசாரிக்கின்றனர்.பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த 'இசட்' பிரிவு பாதுகாப்பு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பாக உயர்த்தப் பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05-அக்-202222:26:28 IST Report Abuse
Ramesh Sargam தொழிலில் எதிரி ஒருவர் அல்லது பலர் இந்த மிரட்டலை விடுத்திருக்கலாம். கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும்.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
06-அக்-202206:24:57 IST Report Abuse
Fastrackஅறிவுக்கொழுந்தா இருக்கீங்க ..போலீஸ் உங்க கருத்த படிச்சிட்டு ஆக்ஷன் எடுப்பாங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X