தஞ்சாவூர்:'வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரிய வேண்டும் என்று வற்புறுத்துவது பொருத்தமற்றது' என ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில், குறுவை அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து, காத்துக் கொண்டு இருக்கின்றனர். அவ்வப்போது பெய்த வரும் மழையால், நெல்மணிகள் வீணாகி வருவதால், விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, விடுமுறை நாட்களிலும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.இதற்கு, சுமை துாக்கும் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.'வார விடுமுறையை பறிப்பதும், தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் கூட பணிபுரிய வேண்டும் என்று வற்புறுத்துவதும் பொருத்தமற்றது, மனிதாபிமானமற்றது' என தெரிவித்து உள்ளனர்.