அனுமதி மறுத்தும் 60ம் கல்யாணம் அமர்க்களம் திருமழிசை கோவிலில் தி.மு.க., நிர்வாகி அத்துமீறல்

Added : அக் 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருமழிசை:திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், அனுமதி மறுத்தும், தி.மு.க., நகரச் செயலரின் மணி விழா நடந்தது. கோவிலைச் சுற்றி மணி விழா விளம்பர பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தப்பட்டது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்
அனுமதி மறுத்தும் 60ம் கல்யாணம் அமர்க்களம் திருமழிசை கோவிலில் தி.மு.க., நிர்வாகி அத்துமீறல்

திருமழிசை:திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், அனுமதி மறுத்தும், தி.மு.க., நகரச் செயலரின் மணி விழா நடந்தது. கோவிலைச் சுற்றி மணி விழா விளம்பர பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தப்பட்டது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிப்பதில்லை. மாலை மாற்றி கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.



அதிர்ச்சி


இந்நிலையில், அனுமதி மறுத்தும், இக்கோவிலில், ஆண்டாள் சன்னிதி முன் நேற்று, திருமழிசை தி.மு.க., நகர செயலர் முனுசாமி மற்றும் இவரது மனைவியும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான அமுதா ஆகியோரின் 60வது மணி விழா நடந்தது.கோவில் வழக்கத்தை மீறாமல் இருக்க, அர்ச்சகர்கள் பங்கேற்க மறுத்து விட்டனர்.


அதையடுத்து, வெளியாட்களை கொண்டு நகர செயலரின் மணி விழா நடத்தப்பட்டது.மணி விழாவில் பால்வளத் துறை அமைச்சர் நாசர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், எழும்பூர் ஐ.பரந்தாமன் உட்பட தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்றதால் பெருமாள் கோவில் வளாகமே அமர்க்களப்பட்டது. கோவிலைச் சுற்றிலும், மணி விழா விளம்பர பேனர்கள் ஆக்கிரமித்திருந்தன. இது பக்தர்கள் மத்தியில், அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.



பக்தர்கள் எதிர்பார்ப்பு


எனவே, கோவிலில் பாரம்பரியத்தை புறக்கணித்து மணி விழா நடத்தியது குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறையினர், ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்த ஜெகந்நாத பெருமாள் கோவில் செயல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''கோவில் வளாகத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பிற நிகழ்ச்சிகள் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இது வழக்கமாக நடப்பதுதான்,'' என, தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202223:04:20 IST Report Abuse
வீரா தருமபுரி எம்பி செந்தில் - எதுக்கு ஹிந்து முறைப்படி 60ம் கல்யாணம். நிக்காஹ் எங்க? சுன்னாஹ் நிகழ்ச்சி எங்க? மத்த மதத்துகாரங்க எங்கே? திககாரர்களை ஏன் அழைக்கல???? 😄😄😄
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X