உண்மையான சிவசேனா எது: தசரா விழாவிலும் போட்டா போட்டி

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மும்பை,:உண்மையான சிவசேனா எது என்பதற்கான போட்டி நிலவி வரும் நிலையில், தசரா பண்டிகை கொண்டாட்டத்திலும் இரு குழுக்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கட்சிக்கு உரிமை கேட்டு, இரு குழுக்களும் தேர்தல் கமிஷனில் முறையிட்டுள்ளன. இந்நிலையில், தசராவையொட்டி,
சிவசேனா ,தசரா விழா, போட்டா போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை,:உண்மையான சிவசேனா எது என்பதற்கான போட்டி நிலவி வரும் நிலையில், தசரா பண்டிகை கொண்டாட்டத்திலும் இரு குழுக்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.



இங்கு, கட்சிக்கு உரிமை கேட்டு, இரு குழுக்களும் தேர்தல் கமிஷனில் முறையிட்டுள்ளன. இந்நிலையில், தசராவையொட்டி, சிவசேனா சார்பில், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்ட விழா நடத்தப்படும். இங்கு, தசரா விழா நடத்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


latest tamil news




அதே நேரத்தில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் வீட்டுக்கு அருகில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ., மைதானத்தில், சிவசேனா அதிருப்தி குழு சார்பில் தசரா விழா நடத்தப்பட்டது.



சிவாஜி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:சிவசேனா என்னவாகும் என்று கேட்டனர். இங்கு குவிந்துள்ள தொண்டர்களை பார்க்கும்போது, கட்சியின் விரோதிகளின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு வேறு ராவணன் முளைத்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உத்தவ் தாக்கரேயின் வாரிசு அரசியலை மறைமுகமாக தாக்கி உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202208:51:27 IST Report Abuse
பேசும் தமிழன் ஆனாலும் சரத்பவார் கெட்டிக்காரர்.. எந்த செலவும் செய்யாமல்... ஒருவருக்கு பதவி ஆசை காட்டி.. ஒரு கட்சியையே.. காலி செய்து விட்டார்.. அவர் உண்மையிலேயே ஒரு ராஜதந்திரி தான்
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
06-அக்-202206:22:43 IST Report Abuse
Fastrack கும்பல் சேக்கறது பட்டபாடு யார் கிட்ட சொல்லமுடியும் ..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-அக்-202205:52:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சிவராத்திரிக்கு அசல் ஆடீம்கா யாருன்னு போட்டு நியூஸ் வரும். அப்பவும் சட்டை பாஜாக்காவோடது தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X