ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கர்னல் பலி

Added : அக் 05, 2022 | |
Advertisement
கவுஹாத்தி-அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், லெப்டினன்ட் கர்னல் உயிரிழந்தார்; மற்றொரு வீரர் பலத்த காயமடைந்தார். வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சீன எல்லைப் பகுதியில், தவாங் என்ற இடத்தில் நேற்று காலை ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கர்னல் பலி



கவுஹாத்தி-அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், லெப்டினன்ட் கர்னல் உயிரிழந்தார்; மற்றொரு வீரர் பலத்த காயமடைந்தார்.



வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சீன எல்லைப் பகுதியில், தவாங் என்ற இடத்தில் நேற்று காலை ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இருவர் மட்டுமே செல்லக்கூடிய இந்த ஹெலிகாப்டர், திடீரென விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து

நொறுங்கியது. இதில், லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்றொரு வீரர், சிகிச்சை பெற்று வருகிறார்.'விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என, ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X