ராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
அமராவதி-மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள், தசரா பண்டிகையன்று ராவணன் உருவ பொம்மைக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் அரிய நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது. வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். தசரா நிறைவு நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து கொண்டாடுவர். ஆனால், மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராமத்தைச் சேர்ந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அமராவதி-மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள், தசரா பண்டிகையன்று ராவணன் உருவ பொம்மைக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் அரிய நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது.



latest tamil news


வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். தசரா நிறைவு நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து கொண்டாடுவர். ஆனால், மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தசரா பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுகின்றனர்.



இவர்கள் ராமர், லட்சுமணன், சீதையை வழிபட்டாலும், பண்டிகையின் இறுதி நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பது இல்லை. அதற்கு பதிலாக ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.


latest tamil news



ஆண்டுதோறும் அரங்கேறும் இந்த வித்தியாசமான கொண்டாட்டம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:ராவணனின் புத்திசாலித்தனம் மற்றும் ஆன்மிக பக்தி ஆகிய குணங்களுக்காக, அவரை வழிபடும் பாரம்பரியம் எங்கள் கிராமத்தில் 300 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ராவணனின் ஆசீர்வாதத்தால் எங்களின் வாழ்வாதாரம் செழிப்பாக இருப்பதாகவும், மகிழ்ச்சியும், அமைதியும் நீடிப்பதாகவும் நம்புகிறோம். அதனால் தான் ராவணனின் உருவ பொம்மைக்கு ஆரத்தி எடுத்து வழிபடுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202205:46:16 IST Report Abuse
அப்புசாமி இராவணனை பாட்டுடைத் தலைவனாக வைத்து தூய தமிழில் புலவர் குழந்தை என்பவரால் இராவண காவியம் என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. இராவணனின் புகழ்பாடும் இந்த ஒரே நூல். தமிழண்டா.
Rate this:
Cancel
japaankaaran - Tokyo,ஜப்பான்
06-அக்-202204:04:55 IST Report Abuse
japaankaaran ராவணன் இறப்பதற்கு முன் ராமரே லட்மணனிடம் ரவணனிடம் அறிவுறை பெறுமாறு சொல்லுவார். இதனால் தசராவில் ராவணின் உருவ பொம்மையை எரிக்காமல் இருக்கலாம். புகையும் குறையும்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-அக்-202201:17:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சங்க இலக்கியத்தில் இலங்கை தென்னாட்டின் கீழ் இருந்தது என்கிறது.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
06-அக்-202206:33:31 IST Report Abuse
Fastrackபூமி தட்டையா இருக்கு ஓரங்களில் நழுவி விழாமல் இருக்க மலைகள் இருக்கின்றன என்று சொல்லாம விட்டார்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X