பழநியிலிருந்து கொடைக்கானல் 'ரோப் கார்' திட்டத்துக்கு அனுமதி

Updated : அக் 06, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி-தமிழகத்தில் பழநியிலிருந்து கொடைக்கானலுக்கு, 12 கி.மீ., துார, 'ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மலைப்பாங்கான பகுதி களில் பொதுமக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆர்வம் அதிகம்இந்த திட்டத்தின் கீழ், மலை உச்சியில் உள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-தமிழகத்தில் பழநியிலிருந்து கொடைக்கானலுக்கு, 12 கி.மீ., துார, 'ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மலைப்பாங்கான பகுதி களில் பொதுமக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.latest tamil news
ஆர்வம் அதிகம்

இந்த திட்டத்தின் கீழ், மலை உச்சியில் உள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு கேபிள் வாயிலாக ரோப் கார்கள் இயக்கப்படும். இதன் வாயிலாக, ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சமாக, 8,000 பேர் பயணிக்க முடியும். மணிக்கு, 15 - 30 கி.மீ., வேகத்தில் இந்த கார்கள் இயக்கப்படும். இது போன்ற மலைப் பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கான செலவு அதிகமாவதால், ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த மத்திய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ஆர்வம் காட்டி வருகிறது. சாலை திட்டத்தை விட ரோப் கார் திட்டத்துக்கு மிக குறைவாகவே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோப் காரில் பயணிப்பதற்கு சுற்றுலா பயணியரிடையே ஆர்வம் அதிகம் இருப்பதால், சுற்றுலா துறையும் மேம்படும். இதையடுத்து, நாடு முழுதும் 18 இடங்களில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டம் பழநியிலிருந்து, கொடைக்கானல் செல்வதற்கு, 12 கி.மீ., துார ரோப் கார் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
18 இடங்கள்

இதேபோல், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியா கோவில், ஆந்திராவில் கர்னுால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் ஜ்யோதிர்லிங்க கோவில், ஹிமாச்சல பிரதேசம் குல்லுவில் உள்ள பிஜிலி மஹாதேவ் கோவில் உட்பட, ஒட்டுமொத்தமாக 18 இடங்களில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான 'டெண்டர்' பணிகள் துவங்கி உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumuruka - Theni ,இந்தியா
07-அக்-202211:26:18 IST Report Abuse
Thirumuruka ரோப் கார் திட்டம் வரவேற்கத்தக்கது. என்ன இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்... காட்டை அழிக்க தேவையில்லை.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202217:20:51 IST Report Abuse
venugopal s அப்புறம் என்ன? ஜப்பான் வங்கியில் இருந்து லோன் வாங்க விண்ணப்பித்து விடுங்கள்.உடனே அடிக்கல் நாட்டிவிடலாம்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஆக ஆக !! ரோப்பு கார் என்ற சாக்கில் காடும் மலைகளையும் அழித்து மரத்த தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்கும் சங்கிகள் திட்டம் எடுபடாது. சுற்று சூழல் பேராளிகள் இந்த திட்டத்தை தவிடு பொடியாக்கி சங்கிகள் திட்டத்தை முறியடிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X