திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள பகுதி கோவளம் ஊராட்சி.பழங்கால கோவில்கள், தேவாலயம், புகழ்பெற்ற தர்கா, அழகான கடற்கரையென, முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக விளங்கும் கோவளத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.இந்நிலையில், கோவளம் பகுதியிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப் படுகின்றன. இங்கு, கழிப்பறை வசதியில்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.ஊராட்சி நிர்வாகம், சில தனியார் தன்னார்வலர் பங்களிப்புடன் 33.76 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவளத்தில் புதிய நவீன கழிப்பறை கட்டப்பட்டது. திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், கழிப்பறையை திறந்து வைத்தார்.