மதுராந்தகம்:கடலுார் மாவட்டம், சித்திரைபேட்டை, பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ரீகன், 29; கடலுாரில் இருந்து சென்னை நோக்கி, 'டாடா இண்டிகா' காரில் வந்து கொண்டிருந்தார். திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.சுதாரித்த ரீகன், சாலையில் காரை நிறுத்தி இறங்கியதும், கார் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மதுராந்தகம் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்தது குறித்து, படாளம் போலீசார் வழக்கு பதிந்தனர்.