நாகர்கோவில்:நாகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்றதாக எஸ்.எஸ்.ஐ., மகன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி பிரேம்நகரைச் சேர்ந்தவர் எஸ்.எஸ்.ஐ., முத்துமாரியப்பன். இவர் மகன் கவுதம் 19; ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்ததுவகல்லுாரி ரோட்டில் நின்று கொண்டிருந்த அவரிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.அதுபோல, மேலும் இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.