ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கூந்தலை வெட்டி எதிர்ப்பு தெரிவித்த சுவீடன் பெண் எம்.பி.

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ஸ்டராஸ்பரக்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஐரோப்பிய பாரளுமன்ற கூட்டத்தில் சுவீடன் பெண் எம்.பி. தனது கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தார்.ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில்
EU lawmaker, who cut off her hair in support of Iranian womenஈரான் பெண்கள் , கூந்தல், சுவீடன் பெண் எம்பி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்டராஸ்பரக்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஐரோப்பிய பாரளுமன்ற கூட்டத்தில் சுவீடன் பெண் எம்.பி. தனது கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 13ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.


latest tamil news


அப்போது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தார். உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு கொளுத்தினர். தங்களது கூந்தலையும் வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், நேற்று ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அபீர் அல் ஷலானி என்ற சுவீடன் பெண் எம்.பி. ஈரானில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து பேசினார். அப்போது, திடீரென தனது கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தார். ஈரான் பெண்கள் நடத்தும் போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என்றார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202209:43:46 IST Report Abuse
ராமகிருஷ்ணன் சப்பைக்கட்டு கட்டுவது தேவையற்றது.
Rate this:
Cancel
06-அக்-202208:37:18 IST Report Abuse
பேசும் தமிழன் முஸ்லீம் பெண்களுக்கு... முத்தலாக் தடை முதற்கொண்டு.... நமது பிரதமர் எவ்வளவு நன்மைகள் செய்து உள்ளார் என்பதை... இந்த செய்தியை படிக்கும் போது நன்றாகவே தெரிகிறது.... அதனால் தான் முஸ்லீம் பெண்கள் அவரை சகோதரராக பாவித்து.... ராக்கி கயிறு கட்டுகின்றனர்
Rate this:
06-அக்-202210:20:28 IST Report Abuse
venugopal sஅவர் எல்லோருக்கும் நல்லது செய்வார், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் மட்டும் ஒன்றும் நல்லது செய்ய மாட்டார்!அது தானே பிரச்சனையே !...
Rate this:
Cancel
06-அக்-202208:31:38 IST Report Abuse
பேசும் தமிழன் பெண்களுக்கான.... நம்ம தமிழ் போராளிகள்... கனி அக்கா மற்றும் மணி அக்கா.... சைக்கோ..தெருமா... சைமன் . செர்த்தரசன் இன்னபிற அல்லகைகள்.... கோமா நிலையில் இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X