ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடுகளின் நடுவில் உள்ள விளம்பர போர்டுகள், பேனர்கள் பராமரிப்பின்றி விழும் நிலையில் உள்ளது.
உயிர் பலி வாங்கும் முன்பு இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மெதுவாக செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் விட்டு விட்டு எரியும் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் மருத்துவமனைகளை காட்டும் வகையில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்டு ரோட்டில் நடுவில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒளிரும் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இவை அமைக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மழையால் இந்த போர்டுகள் அனைத்தும் சேதமுற்று கீழே விழும் நிலையில் உள்ளன. இவற்றால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ரோட்டில் செல்லும் வாகனங்கள்,அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. உயிர்ப்பலி ஏற்படுத்த துடிக்கும் இத்தகைய போர்டுகளை கண்டறிந்து அப்புறப்படுத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ........................
அடிக்கடி தேவை ஆய்வு
ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பேனர்கள், போர்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் போது போதிய பராமரிப்பு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒளிரும் விளக்குகள் பொருத்துவதற்காக அமைக்கப்பட்ட இத்தகைய பெயர் பலகைகள் பலவற்றில் விளக்குகள் எரிவது இல்லை.
முறையாக பராமரித்தால் இத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. போர்டுகள் அமைக்கும் நிறுவனங்களும் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். விபரீதம் நடந்த பின்பு விழிப்பதை காட்டிலும் அதற்கு முன்பே விழித்துக் கொண்டால் விபத்தை தடுக்கலாம். சி. முருகேசன், டிவி மெக்கானிக், ஒட்டன்சத்திரம்....................
Advertisement